இலா பால் சௌத்ரி

2ஆவது மக்களவை உறுப்பினர்

இலா பால் சௌத்ரி (Ila Pal Choudhury)(1908 - 9 மார்ச் 1975) என்பவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சமூக சேவகரும் ஆவார்.

இளமை தொகு

இலா பால் சௌத்ரி பிரித்தானிய இந்தியாவின் கொல்கத்தாவில் வசித்த பிரம்மா குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தந்தை பிஜய் கிருஷ்ண பாசு அலிப்பூரில் உள்ள அலிபூர் விலங்கியல் பூங்காவின் கண்காணிப்பாளராக இருந்தார்.[1][2] இலா, நதியாவின் நில உரிமையாளர் அமியநாராயணன் பால் சவுத்ரியை மணந்தார். இவரது மாமனார் பிப்ரதாசு பால் சௌத்ரி இந்தியாவின் பெங்காலி தொழிலதிபர் மற்றும் நவீன கருத்தாக்கத்தின் ஆதரவாளர். இவர் அரசியலில் நுழைந்து தனது இளம் வயதிலேயே இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[3]

அரசியல் வாழ்க்கை தொகு

காங்கிரசு கட்சியில் சேர்ந்த பிறகு பால் சௌத்ரி நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்து அவருடன் பணியாற்றினார். பால், படிப்படியாக வங்காள மாநிலத்தின் மகளிர் காங்கிரசு பிரிவின் தலைவரானார். 1957ஆம் ஆண்டில், நதியா மாவட்டத்தில் உள்ள நபத்விப் மக்களவைத் தொகுதியிலிருந்து பால் சௌத்ரி முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவையின் தீவிர நாடாளுமன்ற உறுப்பினரானார்.[4][5] பின்னர் 1968-ல் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[6] பள்ளி நிறுவுதல், பொதுநல அமைப்புகள் போன்ற பல்வேறு சமூகப் பணிகளிலும் பால் ஈடுபட்டார்.[3]

இறப்பு தொகு

இலா பால் சௌத்ரி 9 மார்ச் 1975 அன்று இறந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Majumadāra, Līlā (1981) (in bn). Kherora khātā. Ānanda. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7066-939-5. https://books.google.com/books?id=Jr7K6xQwMw8C&dq=%E0%A6%87%E0%A6%B2%E0%A6%BE+%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2+%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80&pg=PA109. 
  2. Chatterjee, Ramananda (1937) (in en). The Modern Review. Prabasi Press Private, Limited. https://books.google.com/books?id=hgcFAAAAMAAJ&q=Bijay+Basu+Zoological+Garden,+Alipore. 
  3. 3.0 3.1 3.2 Ed - S.Sengupta & A. Basu, Vol - I (1960). Sansad Bangali Charitavidhan (Bengali). Sahitya Sansad. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85626-65-0. https://archive.org/details/in.ernet.dli.2015.454299. 
  4. (PDF). "West Bengal Election Commission" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
  5. VOLUME I. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS TO THE SECOND LOK SABHA. 
  6. "Krishnanagar Lok Sabha Elections and Results 2014". elections.in. பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலா_பால்_சௌத்ரி&oldid=3679908" இலிருந்து மீள்விக்கப்பட்டது