இலைப்பரப்பு

இலையின் பரந்து விரிந்த அமைப்பு

இலைப்பரப்பு (leaf lamina; blade) என்பது இலையின் பரந்து விரிந்த அமைப்பாகும். பெரும்பாலும் இங்குதான் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. எவ்விதம் இலைப்பரப்பு அமைந்திருக்கிறது என்பதைப் பொருத்து இலைகளை இரண்டு அடிப்படையான வகைகளாகப் பிரிக்கலாம். தனி இலையில் இலைப்பரப்பானது பிரிவுபடாமல் இருக்கும். என்றாலும், இலையின் வடிவம் சோணைகளாக (lobes) உருவாகியிருந்தாலும், சோணைகளுக்கிடையேயான இடைவெளி முக்கிய நரம்புகளைப் போய் சேராதிருக்கும். கூட்டிலையில் இலைப்பரப்பு முழுவதுமாகப் பகுக்கப்பட்டிருக்கும். இலைப்பரப்பின் ஒவ்வொரு குருத்திலைகளும் முதன்மையான அல்லது இரண்டாம்பட்ச நரம்புகளுடன் பிரிக்கப்பட்டிருக்கும்.

இலைப்பரப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைப்பரப்பு&oldid=3715348" இலிருந்து மீள்விக்கப்பட்டது