இஸ்லாம் பிபி

ஆப்கானிய பொலிஸ் அதிகாரி

இஸ்லாம் பிபி (Islam Bibi) (பிறப்பு: 1974 - இறப்பு: 2013) இவர் ஆப்கானித்தானின் எல்மந்த் மாகாணத்தின் காவல்துறை அதிகாரி ஆவார்.

இஸ்லாம் 1974இல் குந்தூஸ் மாகாணத்தில் பிறந்தார். [1] இவர் 1990களில் ஈரானில் அகதியாக இருந்தார். அதன் பிறகு, பிபி மீண்டும் தாலிபான்களுக்கு எதிராக ஒரு காவல் அதிகாரியாக வந்தார். [2] இவருடைய குடும்பம் இவரது காவல் வேலைக்கு எதிராக இருந்தது. இவருடைய சகோதரன் இவரை மூன்று முறை கொல்ல முயன்றார். [3] பின்னர், பிபி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் (4 சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள்) இருந்தனர்.

இஸ்லாம் பிபி 2000இல் இரண்டாவது லெப்டினன்ட் பதவிக்கு உயர்ந்தார். நேரடியாக இரகசியப் பிரிவுத் தலைவரின் கீழ் பணிபுரிந்தார். இஸ்லாம் பிபி 2013 சூலை 4 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கும் இவரது மைத்துனர், தனது மோட்டார் சைக்கிளில் இவரை வேலைக்கு அழைத்துச் செல்ல வந்தார். இவரது வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது மைத்துனரும் காயமடைந்தார்.

குறிப்புகள் தொகு

  1. rahman, bahram- (July 13, 2013). "Afghanistan's indifference to murder of top female officer: Islam Bibi". natoassociation.ca (in ஆங்கிலம்). NATO Association of Canada (NAOC). Archived from the original on July 27, 2019.
  2. "Female Police Officers Helmand and Kandahar ANP". afghan-bios (in ஆங்கிலம்). Archived from the original on July 27, 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. "Helmand's most senior policewoman: 'My brother tried to kill me three times'". telegraph.co.uk (in ஆங்கிலம்). Archived from the original on 27 July 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாம்_பிபி&oldid=2933618" இலிருந்து மீள்விக்கப்பட்டது