ஈந்தூர் கிழான் தோயன்மாறன்

தோயன் மாறன் ஒரு வள்ளல். இவனது பெயர் ஈந்தூர் கிழான் தோயன் மாறன் என்றும், இரந்தூர் கிழான் கோயமான் என்றும் வெவ்வேறு சுவடிகளில் காணப்படுவதாக டாகடர் உ. வே. சா. புறநானூற்றுப் பதிப்பு குறிப்பிடுகிறது.

வழங்கும் அளவுக்கு இவனிடம் செல்வம் இல்லாவிட்டாலும் செல்வத்தை ஈட்டிக்கொண்டு வந்து வழங்கும் பண்புள்ளம் கொண்டவன் இவன்.[1]

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவனிடம் சென்று பரிசில் பெற்று மீண்டு வாழ்ந்தபோது தன்னை நாடி வந்த மற்றொரு புலவரை “நீயும் வம்மின்” என அழைத்துக்கொண்டு மீண்டும் இந்த மாறனிடம் பரிசில் பெறச் செல்வதாகப் பாடல் கூறுகிறது.[2]

உடனே அவன் தன் உண்ணா மருங்குலைக் (வயிற்றைக்) கொல்லனிடம் காட்டி வேல் வடித்துத் தரும்படி வேண்டுவானாம்.

அந்த வேலைக்கொண்டு வேட்டையாடலாம். அரசனுக்கு உதவலாம். அரசன் தருவதைப் புலவர்க்கு வழங்கலாம். இவற்றில் ஏதாவது செய்து புலவர்க்கு உதவுவான் போலும்.

அடிக்குறிப்பு தொகு

  1. வழங்குவ(து) உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று – திருக்குறள் 955
  2. புறநானூறு 180