ஈர்ப்பிய சிவப்புப்பெயர்ச்சி

ஈர்ப்பிய சிவப்புப்பெயர்ச்சி (Gravitational redshift) என்பது ஒளி அல்லது குறிப்பிட்ட அலைநீளமுடைய பிற மின்காந்த அலைகள் வலிமையான ஈர்ப்பு விசை உடைய பொருளில் இருந்து அதை விடக் குறைவான ஈர்ப்பு விசையை உடைய பொருளை அடையும் போது தோன்றும் அலைநீள அதிகரிப்பு ஆகும். அதாவது கட்புலனாகும் ஒளியைக் கொண்டு கணக்கிட்டால் அலைநீளங்கள் சிவப்பு முனைக்குப் பெயரும். இதனால் இவற்றின் ஆற்றல் மற்றும் அதிர்வெண் குறையும். இதற்கு மாறாக மின்காந்த அலைகள் குறைவான ஈர்ப்பு விசை உடைய பொருளில் இருந்து அதை விட அதிகமான ஈர்ப்பு விசையை உடைய பொருளை அடையும் போது மின்காந்த அலையின் அலைநீளம் அதிகரித்தது போலத் தெரியும். இது நீலப்பெயர்ச்சி எனப்படும்.

படத்தில் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ள அதிகஈர்ப்பு விசை உடைய விண்மீனால் உருவாகும் சிவப்புபெயர்ச்சி