உக்கல ராஜேசுவரம்மா

இந்திய அரசியல்வாதி

உக்கல ராஜேசுவரம்மா (Vukkala Rajeswaramma)(சூலை 10, 1948-01 திசம்பர் 2018) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

Vukkala Rajeswaramma
நாடாளுமன்ற உறுப்பினர்-பதின்மூன்றாவது மக்களவை
பதவியில்
1999-2004
தொகுதிநெல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூலை 1948 (1948-07-10) (அகவை 75)
இறப்பு01 திசம்பர் 2018
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்மருத்துவர் வி. பிரகாஷ் ராவ்
வாழிடம்(s)214, வடக்கு பகுதி, புது தில்லி - 110001
முன்னாள் கல்லூரிகர்னூல் மருத்துவக் கல்லூரி
தொழில்அரசியல்வாதி

இளமை மற்றும் கல்வி தொகு

உக்கல ராஜேசுவரம்மா 1948ஆம் ஆண்டு சூலை 10ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூரில் பிறந்தார். இவர் கர்னூல், கர்னூல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் பட்டம் பெற்று மருத்துவரானார். உக்கல ராஜேசுவரம்மா 14 சனவரி 1970-ல் வி. பிரகாஷ் ராவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[1]

அரசியல் தொகு

1999-ல், ராஜேஸ்வரம்மா 13வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999-2000 மற்றும் 2000-2004 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் மீதான குழுவின் உறுப்பினராகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Thirteenth Lok Sabha Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கல_ராஜேசுவரம்மா&oldid=3689609" இலிருந்து மீள்விக்கப்பட்டது