உடல் உறுப்புகள் கொடை

உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவருடைய உடல் உறுப்புகளை இறந்த பின்னரும் வாழும் வாழ்க்கையைத் தருவது உடலுறுப்பு தானம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்பு கண்தானமும் செய்வது மிகச் சிறப்பானது என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

தேசிய கொடையளிப்பவர் நினைவுச் சின்னம், நார்டன், நெதர்லாந்து

ஒருவர் உயிருடன் இருந்தாலும் அவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயலிழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறுநீரகம் போன்ற முக்கியமான சில உடல் உறுப்புகளை அவருடைய வாரிசுதாரர்கள் விரும்பினால் தானம் செய்யலாம். இந்த உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று சிலர் உயிர் வாழ முடியும் என்பதால் இந்த உடலுறுப்புகள் தானம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.[1][2][3]

விழிப்புணர்வு தொகு

கண்களையும், உடலுறுப்புகளையும் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்தினால் அது சரியாக இருக்கும். இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 5 பேர் உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தால் 2200 உடலுறுப்புக்கள், 10 ஆயிரம் சிறுநீரகங்கள், 5 ஆயிரம் இதயம், 5 ஆயிரம் கல்லீரல்கள் கிடைக்கும். இதை இந்தியா மட்டுமின்றி ஆசியா கண்டம் முழுவதும் உடலுறுப்பு தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடியும்.

உடல் உறுப்புகள் தானம் செய்யும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ் திரைப்பட நடிகர் கமலகாசன் தன்னுடைய உடல் உறுப்புகளை தான் இறந்த பிறகு தானம் செய்வதற்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Office on Women's Health (July 16, 2012), Organ donation and transplantation fact sheet, U.S. Department of Health and Human Services, archived from the original on July 28, 2016, பார்க்கப்பட்ட நாள் July 30, 2016
  2. US Department of Health and Human Services. "Living Organ Donation". Organdonor.gov. பார்க்கப்பட்ட நாள் October 17, 2017.
  3. "Organ Donation: MedlinePlus". பார்க்கப்பட்ட நாள் July 30, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்_உறுப்புகள்_கொடை&oldid=3769085" இலிருந்து மீள்விக்கப்பட்டது