உணவுக்குழாய் அழற்சி

உணவுக்குழாய் அழற்சி அல்லது உணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இது கடியதாகவோ அல்லது நெடுங்காலத்து நோயாகவோ இருக்கலாம். கடிய உணவுக்குழாய் அழற்சி சீதவழற்சியாகவோ அல்லது சீழ் உண்டாகும் அழற்சியாகவோ காணப்படும், அதேவேளையில் நெடுங்காலத்து உணவுக்குழாய் அழற்சியானது மிகைவளர்ச்சியாகவோ அல்லது நலிவுற்றதாகவோ இருக்கலாம்.

உணவுக்குழாய் அழற்சி
கேர்ப்பிசு தீநுண்ம உணவுக்குழாயின் நுண்ணோக்கிப்படம் H&E சாயம்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K20.
ஐ.சி.டி.-9530.10
ம.பா.தD004941

காரணங்கள் தொகு

தொற்று தொகு

நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர்க்கு தொற்றுக்களால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சி உருவாகுகின்றது. இவற்றின் வகைகளாவன:

அகநோக்கி மூலம் இவற்றை வேறுபடுத்தி அறியமுடியும்.[1]

ஏனைய காரணங்கள் தொகு

  • பொதுவான காரணியாக விளங்குவது இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகும், இதனால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியானது பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி (reflux esophagitis) எனப்படுகின்றது.
  • அமில அல்லது கார வேதியியல் கலவைகள் காயத்தை ஏற்படுத்துவதாலும் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது. கவனக்குறைவாக வீட்டில் வைக்கப்படும் பொருட்களால் சிறுவர்களில் பொதுவாக இவ்வகையைச் சந்திக்கமுடிகின்றது, மேலும் அரிக்கும் திரவங்களைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சிப்போரிலும் இதைக்காணலாம்.[2]
  • கதிர்வீச்சுச் சிகிச்சையால் ஏற்படும் கதிர்வீச்சால் காயம் ஏற்பட்டு இந்நோயை உண்டாக்கலாம்.
  • மூக்கு இரையககுழாய் மூலம் உணவு, நீராகாரம் செலுத்தப்படுவோரிற்கும் உணவுக்குழாய்க் காயம் ஏற்படுகின்றது.
  • அமில மிகைப்பு.
  • மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடு

தீவிரத்தை வகைப்படுத்தல் தொகு

நான்கு வகுப்புக்களாக உணவுக்குழாய் அழற்சியின் தீவிரம் லொஸ் ஏஞ்சல்ஸ் வகைப்பாட்டைத் தழுவி வகைப்படுத்தப்பட்டுள்ளது.:[3][4]

வகுப்பு A ஒன்று அல்லது மேற்பட்ட சீதமென்சவ்வுப் பாதிப்பு < 5 mm நீளம்
வகுப்பு B ஒன்று அல்லது மேற்பட்ட சீதமென்சவ்வுப் பாதிப்பு > 5mm நீளம், ஆனால் சீதமென்சவ்வு மடிப்புக்களுக்கிடையே தொடர்ச்சி இல்லை.
வகுப்பு C சீதமென்சவ்வுப் பாதிப்பு > 2 சீதமென்சவ்வு மடிப்புக்களுக்கிடையே தொடர்ச்சியானது, ஆனால் உணவுக்குழாயின் பரிதியின் 75%க்கும் குறைவானது.
வகுப்பு D சீதமென்சவ்வுப் பாதிப்பு உணவுக்குழாயின் பரிதியின் 75%க்கும் அதிகமானது.

மேற்கோள்கள் தொகு

  1. Meinhard Classen; Guido N. J. Tytgat; M.D. Ph.D.; Charles J. Lightdale (2010). Gastroenterological Endoscopy. Thieme. பக். 490–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783131258526. http://books.google.com/books?id=Tb2Bnn_icI0C&pg=PA490. பார்த்த நாள்: 26 June 2010. 
  2. Lawrence M. Tierney, Jr., MD; Stephen J. McPhee, MD; Maxine A. Papadakis, MD. (2007). Current Medical Diagnosis & Treatment 2007 (46 ). The McGraw-Hill Companies. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0071472479. 
  3. webgerd.com > Los Angeles Classification of Esophagitis பரணிடப்பட்டது 2015-01-30 at the வந்தவழி இயந்திரம் By M. Farivar; In turn citing: Lund ell L, Dent J, Bennett J, et al. Endoscopic assessment of esophagitis: clinical and functional correlates and further validation of Los Angeles classification. Gut 1999; 45:172-80
  4. Laparoscopic bariatric surgery , Volyme 1. William B. Inabnet, Eric J. DeMaria, Sayeed Ikramuddin. ISBN 0-7817-4874-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுக்குழாய்_அழற்சி&oldid=3235269" இலிருந்து மீள்விக்கப்பட்டது