உதய் நாராயண் செளத்ரி

இந்திய அரசியல்வாதி

உதய் நாராயண் செளத்ரி (Uday Narayan Choudhary) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2005 முதல் 2015 வரை பீகார் சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றினார். 1990 முதல் 1995 வரையிலும், பின்னர் 2000 முதல் 2015 வரையிலும் இமாம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜீதன் ராம் மாஞ்சியிடம் தோல்வியடைந்தார். மஹாகத்பந்தன் பிரிந்ததையும், ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்ததையும் எதிர்த்து 2019ஆம் ஆண்டில் இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

உதய் நாராயண் செளத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஆகத்து 1952 (1952-08-08) (அகவை 71)
கித்வாய்புரி, பீகார், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
கல்விபட்னா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

2014 இந்திய பொதுத் தேர்தலில் ஜமுய் மக்களவைத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[2][3] செளத்ரி நிதீசு குமாரின் தீவிர விசுவாசியாகக் கருதப்பட்டார். ஏனெனில் இவர் ஆகத்து 2014-இல் 8 கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து ஐக்கிய ஜனதா தளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை முறியடித்தார். பிப்ரவரி 2014-இல் 13 இராச்டிரிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு கிளர்ச்சிக் குழுவை ஒரு தனி அணியாக அறிவிக்க இவர் எடுத்த முடிவு பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும், 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் சேருவதற்கான ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவை இவர் எதிர்த்தார். மேலும் பல்வேறு தளங்களில் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்_நாராயண்_செளத்ரி&oldid=3960155" இலிருந்து மீள்விக்கப்பட்டது