உந்துவிசை என்பது விளைவு விசையாகும். இதனை நியூட்டனின் இரண்டாம் மற்றும் மூன்றாம் விதிகள் கொண்டு அளவிடலாம். ஒரு தொகுதியானது நிறையை முடுக்கும்போது அல்லது முடுக்கி ஒரு திசையில் வெளியேற்றும்போது அதற்கு நேரெதிர்த்திசையில் அத்தொகுதியின் மேல் அதே அளவு விசை செயல்படும், இதுவே உந்துவிசை ஆகும்.

எந்திரப் பொறியியலில், முதன்மை விசைக்கு செங்குத்துத் திசையில் செயல்படும் விசை உந்துவிசை எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்துவிசை&oldid=2225274" இலிருந்து மீள்விக்கப்பட்டது