புலாவ் உபின் ',சிங்கப்பூர் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். சிங்கபூரின் வடகிழக்கில் சுமார் 10.19 சதுர கி.மீ பரப்பளவில் இருக்கும் இந்த தீவில் ஒரு காலத்தில் கிரானைட் சுரங்கங்கள் இருந்தன. 1960 ஆம் ஆண்டுகளில் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வந்தனர். இந்த தீவு இதன் இயற்கை வளங்ககளுக்காக மிகவும் பிரபலமானது. சிங்கப்பூரில் இன்றும் வளர்ச்சி அடையாத கிராம பகுதி இது ஒன்றே.

பெயர்க் காரணம் தொகு

மலாய் மொழியில் புலாவ் உபின் என்ற வார்த்தைக்கு கிரானைட் தீவு என்று பொருள். ஜாவாநியர்களின் மொழியில் உபின் எட்ரால் சதுரமாக்கப் பட்ட கற்கள என்று பொருள். ஒருகாலத்தில் தரைகளில் பதிக்கப்பட்ட இந்த தீவின் கற்கள் சுபின் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி உபின் ஆனது என்றும் கூறுவர். ஹோக்கெயின் மொழியில் இந்த தீவை கல் மலை என்று பொருள் தரும் ஸிஒஹ் ஸுஆ' என்று அழைத்தனர்.

உரைக்கூற்று தொகு

இந்த தீவை பற்றி செவிவழிச் செய்தியாக கூறப்படும் கதையில், ஒருநாள் ஒரு யானை, பன்றி மற்றும் ஒரு தவளை ஆகிய மூன்றும் சிங்கப்பூர் தீவில் இருந்து அதன் மருகரயான ஜோஹோருக்கு( தற்பொழுதுள்ள மலேசியா), நீந்தி செல்ல வென்டும், அதில் தொர்போர் கல்லாக மாறுவர் என்ற நிபந்தனையுடன் நீந்தத் தொடங்கினர். பலத்த போராட்டத்திற்கு பின் மூவராலும் மறு கரையை அடைய முடியவில்லை. இதில் யானையும், பன்றியும் புலாவ் உபின் தீவாக மாறியதாகவும் , தவளை மற்றொரு தீவான புலாவ் செகுடு என்று அழைக்கப்படும் தவளை தீவாக ஆனது என்றும் கூறுவார்.

வரலாறு தொகு

புலாவ் உபின் தீவு முதன்முதலில் 1828 ஆம் ஆண்டு பிராங்க்ளின் மற்றும் பிலிப் ஜாக்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட வரைபடத்தில் புளோ ஒபின் என்ற பெயரில் இருந்தது

சுரங்கங்கள் தொகு

 

பிரித்தானியர்கள் சிங்கப்பூரை ஆண்ட காலம் தொட்டே இந்த தீவின் கிரானைடுகள் மிகவும் பிரபலமாகும். இந்த மலையில் உள்ள குகைகள், முகுடுகள் , உயர்ந்து வளர்ந்து நிற்கும் பறைகள் என்று பார்பதற்கு அழக்காக இருந்த காரணத்தினால் இதை 1850 ஆம் ஆண்டு ஜான் டர்ன்பால் தாம்சன் என்பவர் ஓவியமாக வரைந்துள்ளார்.

இங்கு இருந்து எடுத்து செல்லப்பட்ட கற்கள் பெத்ரா ப்ரான்கா தீவில் உள்ள கலங்கரை விளக்கம் கட்டுவதற்கும், சிங்கப்பூர்-ஜோஹூர் தரைப்பாலம் அமைப்பதற்கும் பயன்படுத்தப் பட்டன. 1970 வாக்கில் மூடப்பட்ட இந்த சுரங்கங்கள் இன்று மீண்டும் காடுகளாக மாறிவிட்டன. இங்கு வாழ்த்த மக்களும் மத்திய தீவிற்கு குடிபெயர்ந்து விட்டனர்.

சுரங்கத்தொழில் அல்லாது இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களும் செய்யப்பட்டன.

மக்கள் குடியேற்றம் தொகு

 

1880 ஆம் ஆண்டு கல்லாங் ஆற்றுப்படுகையில் வசித்த மலாய் இன மக்கள் எண்டுட் செனின் என்பவர் தலைமையில் இந்த தீவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. முன்பிருந்த பல காம்பூங்கள் அந்த இடத்தின் சீற்றத்தை வைத்தோ அல்லது அங்கு முதல் குடிஎரியவரின் பெயரை வைத்தோ அழைக்கப்பட்டது.

லேமன் என்பவர் வசித்த இடம் கம்போங் லேமன் ஆனது, ஜாவா என்ற சிங்கப்பூரர் வசித்த இடம் காம்போங் சிக் ஜாவா என்றானது. ஜெளுடோங் மரம நிறைத்த சாங்கி பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்கள் வசித்த இடம் கம்போங் ஜெளுடோங் ஆனது.

பின் கியாங் பள்ளி இங்கு 1952 ஆம் ஆண்டு திடங்கப்பட்டது. சுமார் 400 மாணவர்கள் படித்த இந்த பள்ளி திடக்கத்தில் அங்குள்ள வாயாங் கலையரங்கத்தில் நடந்தது. பின்னர் மக்கள் இந்த தீவை விட்டு வெளேர தொடங்கியவுடன் 1985 ஆம் ஆண்டு இந்த பள்ளி மூடப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முடிளுமாக இடிக்கப்பட்டுவிட்டது. இந்த தீவில் 1956 தொடங்கி 1970 வரை ஒரு தனியார் மலாய் பள்ளியும் நடந்து வந்தது.

1967ஆம் ஆண்டு இங்குள்ள காம்போங் பாஹ்ரு மட்டும் காம்போங் நூர்தீன் ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் 30 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேசிய காவலர் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.

தற்போதைய நிலை தொகு

 

புலாவ் உபின் தீவு சிங்கப்பூர் நாட்டிலேயே, கான்க்ரீட் கட்டிடங்களும், தார் சாலைகளும் இல்லாத இயற்கையான ஒரே இடமாகும். பழமையான கம்போங் வாழ்க்கை இன்றளவும் இந்த தீவில் இருந்து வருகிறது. இந்த தீவிலும் வீடுகளை கட்டி அதில் மக்களை குடியமர்த்தி, கடல் வழியே தொடர் வண்டி சேவையும் தொடங்க அரசாங்கம் பல வருடங்களாக திட்டமிட்டு வருகிறது. ஆனால் இயற்கையான அழகை விரும்புபவர்கள் இதை எதிர்க்கின்றனர்.

2007 ஆம் ஆண்டு இந்தோனேசியா அரசு கிரானைட் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தமையால், சிங்கபூர் அரசு மீண்டும் இங்கு சுரங்கங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளது.

சூழலியல் செயல்திட்டம் தொகு

இருவாயன் பாதிகாப்பு திட்டம் தொகு

தேசிய பல்லுயிர்மக் கழகம், மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த தீவில் இருவாயன் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு இந்த தீவை விட்டு முற்றிலுமாக சென்று விட்ட இந்த பறவைகள் இப்பொழுது மீண்டும் இங்கு காணப்படுவதால் இவற்றில் அரசு மிகவும் அக்கறை காட்டிவருகிறது . பொதுவாக இருவாயன் பெண் பறவைகள் மரப்போந்துகளில் முட்டையித்ய்வதால் அதற்கேற்ப இங்கு பொந்துகள் இல்லாத காரணத்தாலும் இந்த தீவில் செயற்கை மரப்போந்துகள் இங்கு வைக்கப் பட்டுள்ளன. இதில் பொருத்தப்பட்டுள் புகைப்பட கருவிகள், இந்த பறவைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவுகிறது.

கடற்குதிரை கண்காணிப்பு திட்டம் தொகு

2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல், தேசிய பல்லுயிர்மக் கழகம், தேசிய பூங்கா வாரியம் ஆகியவற்றின் தொண்டூழியர்கள் இணைந்து இங்கு கடல் குதிரையின் வாழ்வாதாரத்தைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். கடற்குதிரை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இங்கு அவற்றின் எண்ணிக்கை , வளர்ச்சி மற்றும் குழாய்மீன்கள் பற்றியும் ஆராய்ச்சி நடைபெறுகிறது.

இடஞ்சார்ந்த சுற்றுலாக்கள் தொகு

 

பல வருடங்களாக சிங்கப்பூர் மக்களின் மனம் கவர்ந்த இயக்கி தீவாக இந்த இடம் உள்ளது. அதிகப்படியான மக்கள் தங்கள் கோடைகால முகாம்களுக்கு இந்த தீவை பயன்படுத்துகின்றனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இங்குள்ள செக் ஜாவா என்ற இடத்தில உள்ள 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பவளப்பாறைகள் மிகவும் பிரசித்தம். அதிசர்ந்து இங்கு வாழும் உயிரினங்களும் இங்கு அதிகம்.

மின்சார வசதியில்லாத இந்த தீவில், தீசல் எண்ணெய் கொண்டு இயங்கும் மின் இயற்றிகளால் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. இது போன்ற காலத்தில் பிறந்த சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்கையை விளக்க தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வருகின்றனர்.இதை காலத்தை பின்சென்று பார்க்கும் ஒரு இடமாக எல்லோரும் கருதுகின்றனர்.

இந்த தீவில் அதிக இடங்கள் அதிகத் தொலைவில் இருப்பதால் இங்கு வாடகைக்கு கிடைக்கும் மிதிவண்டிகளை எல்லோரும் பயன்படுத்துகின்றனர்.

இங்கு செல்ல தொகு

 

சிங்கபூரின் சாங்கி பயணிகள் படகு தளத்தில் இருந்து இங்கு செல்ல நிறைய படகுகள் உள்ளன. ஒவ்வொரு படகும் 12 பேர்வரை ஏற்றிசெல்கின்றனர். ஒருவருக்கு சுமார் 2 வெள்ளி முதல் 2.50 வெள்ளி வசூலிக்கப்படுகிறது. ஒரு படகு நிரம்பும் வரை அதில் உள்ள அனைவரும் காத்திருக்க வேண்டும். இந்த காத்திருப்பை விரும்பாதோர் 30 வெள்ளி செலுத்தி அந்த படகை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • A Guide to Pulau Ubin, Singapore Environmental Heritage Series, Mobil Oil Singapore Pte Ltd & The Nature Society (Singapore)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபின்_தீவு&oldid=3910904" இலிருந்து மீள்விக்கப்பட்டது