உப்பலமடுகு நீர்வீழ்ச்சி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள அருவி

உப்பலமடுகு நீர்வீழ்ச்சி (தடா அருவி , கம்பகம் அருவி) இது இந்தியாவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டிக்கு வடக்கே அமைந்துள்ளது. புச்சிநாயுடு கன்ரிகா மற்றும் வரதையாபாளம் மண்டலத்தின் கீழ் வரும் இந்நீர்வீழ்ச்சி, சென்னையிலிருந்து 80 கி.மீ (50 மைல்) தொலைவிலும், ஸ்ரீகாளஹஸ்தியிலிருந்து 35 கி.மீ (22 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

தடா அருவி
காட்டினுள் செல்லும் ஓடை

இந்த நீர்வீழ்ச்சி காம்பகம் காடு (அ) சித்துலியா கோனா என்ற காட்டுப்பகுதியில் உள்ளது. மகா சிவராத்திரி பண்டிகையின்போது மக்கள் இங்கே திரளாக செல்வார்கள். தடா அருவி சிறிதே அறியப்பட்ட சுற்றுலா தலம். பசுமை, நீர்வீழ்ச்சி, சிறுகுன்றுகள் நிறைந்த இப்பகுதி உலா, மலையேற்றம் மற்றும் உல்லாசப்பயணத்திற்கு ஏற்றதாகும்.

சுற்றுலாவிற்கு சிறந்த தருணம் தொகு

அக்டோபர் மத்தியிலிருந்து பிப்ரவரி 15 வரை இங்கு மழைப்பருவம் என்பதால் இது சுற்றுலாவிற்கு ஏற்ற காலம்.

நுழைவு தொகு

அருவியை அடைய வரதையாபாளம் கிராமத்தின் வழியே செல்ல வேண்டும். இக்கிராமத்துக்கும் அருவிக்கும் உள்ள 12 கி.மீ வழியில் 7 கி.மீ மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி அன்று ஆந்திர அரசு வரதையாபாளத்தில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழங்குகிறது. இங்கு செல்வதற்குச் சிறிய கார்களைத் தவிர்க்கப்படுகிறது.

சென்னையிலிருந்து சூலூர் பேட்டை, நெல்லூர் செல்லும் பல தொடர்வண்டிகளும் புறநகர் பேருந்துகளும் தடா வழியாக செல்கின்றன. சூலூர் பேட்டை செல்லும் தொடர்வண்டி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என்று இரவு 8:30 மணி வரை இயங்குகின்றது.

அருகில் விடுதிகள் ஏதும் இல்லாததால், காளஹஸ்தி அல்லது வரதையாபாளம் ஆகியவை தங்குவதற்குரிய இடங்களாகும்.

மலையேற்றம் தொகு

நீர்வீழ்ச்சியை அடைவதற்கு மலையேற்றம் அவசியம். போதிய வழிகாட்டு குறியீடுகள் ஏதும் இல்லாததால், பிறர் உதவியை அதிகம் நாட வேண்டி இருக்கும். உடல்நலமிக்க மக்களால் மட்டுமே இவ்விடத்தை அடைய முடியும். கற்கள் மேல் நடக்க விரும்பாதவர்களுக்கு இது ஏற்ற இடம் அல்ல.

தடா தொடர்வண்டி நிலையத்தை அடைந்தவுடன், ஷேர் ஆட்டோக்கள் மூலம் மலையடிவாரத்தை அடையலாம். மலையேற்ற தூரம், கீழ் இறங்குவதையும் சேர்த்து, மொத்தம் 10 கி.மீ ஆகும். இதில் 4 கி.மீ மிகவும் கடினமான கற்பாதையாகும்.

150 மீட்டர் மலையேற்றத்திற்கு பிறகு சிறு ஓடையொன்று உள்ளது. இதை கடந்து மண்பாதையில் மேலும் தொடர்ந்து செல்லவேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் சிவன் கோவில் தென்படும்.[1] அப்படி கோவில் ஏதும் தென்படவில்லையெனில், அருகிலுள்ள ஓடையை தேடி அதன் கரையோரமே மலையேறுவது சிறந்த வழியாகும்.

இதற்குப் பின்னர் பாதை கடினமானதாக மாறிவிடும். சில நேரங்களில் 10 அடி பாறைகளையும் தொற்றி ஏறவேண்டிவரும். மலையேற்றத்தின் முடிவில் இரண்டு நீர்வீழ்ச்சிகளை காணலாம். கோடைக்காலங்களில் ஒன்றில் மட்டுமே நீர் இருக்கும்.

அருகில் உள்ள குறிப்பிடத்தக்க இடங்கள் தொகு

ஸ்ரீசிட்டி என்றழைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலம் தடாவில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. ’ஒன்னஸ் டெம்ப்பிள்’ ('Oneness Temple') என்றழைக்கப்படும் ஒருமைப்பாட்டு கோவில் மூன்று கி.மீ தொலைவில் உள்ள கோல்டன்சிட்டியில் உள்ளது. பழவேற்காடு ஏரியும் எளிதாக அடையும் தூரத்தில் அமைந்துள்ளது.

உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ubbalamadugu Falls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.