உமா சங்கர்

இந்திய காற்பந்தாட்ட வீரர்

உமா சங்கர் (Uma Sankar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை கால்பந்தாட்ட வீரராவார். சென்னை நகரத்தின் ஐ-கூட்டிணைவு சங்க அணியில் நடுக்கள வீரராக இவர் விளையாடினார். 2000 ஆமாவது ஆண்டில் சூலை மாதம் 31 ஆம் தேதியன்று உமா சங்கர் பிறந்தார்.

தொடக்க காலம் தொகு

தமிழ்நாட்டில் பிறந்த உமாசங்கர் தொடக்க காலத்தில் இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரை மையமாகக் கொண்டு ஓசோன் கால்பந்தாட்ட சங்க அணிக்காக விளையாடத் தொடங்கினார்.

சென்னை தொகு

2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் உமா சங்கர் சென்னையில் ஐ-கூட்டிணைவு சங்க அணியில் சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் இந்தியன் ஆரோசு அணிக்கு எதிரான போட்டியில் ஐ-கூட்டிணைவு சங்க அணியில் இவர் அறிமுகமானார். அப்போட்டியில் இவர் 91 ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் இறங்கினார். இவர் இடம்பெற்றிருந்த அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.[1]

போட்டிகள் புள்ளிவிவரம் தொகு

2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதி நிலவரப் படியான தரவுகள்[2]

சங்கம், பருவம் மற்றும் போட்டியின் அடிப்படையில் பங்கேற்பும் கோல்களும்
சங்கம் பருவம் கூட்டிணைவு கோப்பை கண்டம் மொத்தம்
பிரிவு போட்டி கோல்கள் போட்டி கோல்கள் போட்டி கோல்கள் போட்டி கோல்கள்
சென்னை நகர கால்பந்து சங்கம் 2020–21 ஐ-கூட்டிணைவு 3 0 3 0
மொத்த கோல்கள் 3 0 0 0 0 0 3 0

மேற்கோள்கள் தொகு

  1. "Chennai City 1–0 Indian Arrows". Soccerway.
  2. உமா சங்கர் at Soccerway
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_சங்கர்&oldid=3935858" இலிருந்து மீள்விக்கப்பட்டது