உமோஜா கிராமம்

உமோஜா கிராமம் கென்யாவின் வட பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு கிராமம். இது தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் அமைந்துள்ளது. இது 1990 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் தப்பிய 15 பெண்களைக் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது.[1] இந்த கிராமத்தின் தலைவியாக பிரித்தானிய இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி என்ற பெண் செயற்பட்டு வருகிறார். இங்கு வாழ்பவர்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர். ஆகத்து 2015ன் கணக்கெடுப்பின் படி இந்தக் கிராமத்தில் 47 பெண்களும், 200 குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்.

உமோஜா கட்டுப்பாடுகள் தொகு

உமோஜா கிராமத்தில் இணைவதற்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு வாழும் பெண்கள் பாரம்பரிய உடைகளையும், ஆபரணங்களையும் அணிய வேண்டும். இங்கு புகைப்பிடிப்பதற்கும், பெண் உறுப்புச் சிதைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் இருக்கும் கிராமத்துப் பெண்களுக்குப் படிப்பு, பெண் உரிமைகள், ஆண்-பெண் சமத்துவம், வன்முறையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The village where men are banned
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமோஜா_கிராமம்&oldid=3364656" இலிருந்து மீள்விக்கப்பட்டது