உயிரியற்பிய வேதியியல்

உயிரியற்பிய வேதியியல் (Biophysical chemistry) என்னும் இயற்பிய அறிவியல் பிரிவானது இயற்பியல் மற்றும் இயற்பிய வேதியியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி தொகுப்பியக்க உயிரியலைப் படிப்பதற்கு பயன்படுகிறது[1]. உயிரிய அமைப்புகளில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கான விளக்கங்களை மூலக்கூறுகளின் அல்லது மேற்புற-மூலக்கூற்று வடிவங்களின் அடிப்படையில் விளக்கங்களைத் தேடும் ஆய்வுகள் இத்துறையில் நடத்தப்படுகின்றன.

ஆர்.என்.ஏ வை புரதங்களாக மாற்றும் செயல்முறையில் புரத இயங்கியலை நுண்ணளவில் பயன்படுத்தும் உயிரியல் இயந்திரமான இரைபோசோம்

வழிமுறைகள் தொகு

உயிரியற்பிய வேதியியலாளர்கள் இயற்பிய வேதியியலில் உள்ள பல்வேறு செய்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரிய அமைப்புகளிலுள்ள வடிவங்களை ஆராய்கிறார்கள். நிறமாலையியல் வழிமுறைகளான அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு (nuclear magnetic resonance; NMR), எக்சு கதிர் விளிம்பு விளைவு (X-ray diffraction) போன்றவை இத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Peter Jomo Walla (8 July 2014). Modern Biophysical Chemistry: Detection and Analysis of Biomolecules. Wiley. pp. 1–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-68354-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியற்பிய_வேதியியல்&oldid=2996841" இலிருந்து மீள்விக்கப்பட்டது