உரவகொண்டா (Uravakonda) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். அனந்தபூர் வருவாய் வட்டத்தின் உரவகொண்டா மண்டலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. மேலும் இந்நகரம் ஒரு நகரப்பகுதியின் திரட்சியாகவும் வளர்ந்துவருகிறது.[1]

உரவகொண்டா
Uravakonda
ఉరవకొండ
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்உரவகொண்டா
ஏற்றம்
459 m (1,506 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்35,565
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு தொகு

14.95° வடக்கு 77.27° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[2] உரவகொண்டா கிராமம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 459 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [3]புக்கராயசமுத்திரத்தின் மக்கள் தொகை 41,865 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். உரவகொண்டா நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 61%. இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மொத்த மக்கள் தொகையில் ஆண்களில் 71 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 50 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 12% அளவில் உள்ளனர். உரவகொண்டாவுக்கு அருகில் குண்டக்கல் என்ற நகரம் இருக்கிறது.

சாலைப்போக்குவரத்து தொகு

52 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாவட்டத் தலைநகர் அனந்தபூர் மற்றும் 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த பெல்லாரி மற்றும் குண்டக்கல் ஆகிய நகரங்களுடன் உரவகொண்டா நன்றாக சாலைப் போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "District Census Handbook - Anantapur" (PDF). Census of India. p. 14–15,234. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
  2. Falling Rain Genomics, Inc - Uravakonda
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரவகொண்டா&oldid=3574934" இலிருந்து மீள்விக்கப்பட்டது