உருக்னுதீன் பிரோசு

தில்லி சுல்தானகத்தின் நான்காவது சுல்தான்

உருக்குன்- உத்-தின் பிரோசு (Ruknuddin Firuz) அல்லது உருக்குன் அல்-தின் பிரோஸ் (இறப்பு 19 நவம்பர் 1236) என்பவர் 1236 இல் ஏழு மாதங்களுக்கும் குறைவாக தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளராக இருந்தார். ஒரு இளவரசராக, இவர் சுல்தானகத்தின் பதாவுன் மற்றும் இலாகூர் மாகாணங்களை நிர்வகித்தார். தில்லி சுல்தானகத்தின் மூன்றாவது முசுலிம் துருக்க சுல்தானும், மம்லுக் வம்சம் அல்லது தில்லி அடிமை வம்சம் எனப்படும் வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளருமான மம்லுக் ஆட்சியாளரான அவரது தந்தை சம்சுத்தீன் இல்த்துத்மிசு இறந்த பிறகு இவர் அரியணை ஏறினார். இருப்பினும், உருக்னுதீன் ஆட்சியைக் கவனிக்காமல் பிற பொழுதுபோக்குச் செயல்களில் தனது நேரத்தைச் செலவிட்டார். மேலும் இவரது தாயார் ஷா துர்கனிடம் நிர்வாகத்தை விட்டுவிட்டார். தவறான நிர்வாகம் உருக்னுதீன் மற்றும் அவரது தாயாருக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபுக்களும் இராணுவமும் இவரது ஒன்றுவிட்ட சகோதரி ரசியா பேகத்தை அரியணையில் அமர்த்தினார்கள்.

உருக்னுதீன் பிரோசு
Sultan
உருக்னுதீன் பிரோசின் காளை மற்றும் குதிரைவீரன் வகை நாணயம்
4வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்ஏப்ரல்/மே 1236 – நவம்பர் 1236
முன்னையவர்சம்சுத்தீன் இல்த்துத்மிசு
பின்னையவர்ரசியா பேகம்
பிறப்புஅறியப்படவில்லைn
இறப்பு19 நவம்பர் 1236
தில்லி சுல்தானகம்
புதைத்த இடம்
சுல்தான் காரி, தில்லி
குழந்தைகளின்
பெயர்கள்
அலா-உத்-தீன்- மசூத்
அரசமரபுமம்லூக்
தந்தைசம்சுத்தீன் இல்த்துத்மிசு
தாய்ஷா துர்கன்
மதம்இசுலாம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

உருக்னுதீன், தில்லி சுல்தான் இல்த்துத்மிசு மற்றும் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த கைப் பணிப்பெண்ணாக இருந்த அவரது மனைவி ஷா துர்க்கனுக்குப் பிறந்தார்.[1] ஒரு இளவரசராக, இவருக்கு 1228 இல் பதாவுனின் அதிகாரம் வழங்கப்பட்டது [2] [3] இல்த்துத்மிசின் போட்டியாளரான நசீர் அத்-தின் கபாச்சாவின் முன்னாள் அமைச்சரான ஐனுல் முல்க் உசைன் அஷ்அரியின் ஆதரவுடன் இவர் பதாவுனை நிர்வகித்தார். [1]

இல்த்துத்மிசு தனது மூத்த மகன் நசிருதின் முகமதுவை தனது வாரிசாக வளர்த்தார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக 1229 இல் மரணமடைந்தார்.[4] இல்த்துத்மிசு 1231 இல் ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரசியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். சுல்தான் இல்த்துத்மிசு திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்கால கட்டத்தில் ரசியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார். [5] இருப்பினும், அவர் இறப்பதற்கு சற்று முன்பு, இல்த்துத்மிசு தனது வாரிசாக உருக்னுதீனை நியமிக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. [6] 1233 இல், அவர் இலாகூரின் நிர்வாகியாக உருக்னுதீனை நியமித்தார். [2] அவரது கடைசி நாட்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, அவர் இலாகூரிலிருந்து தில்லிக்கு உருக்னுதீனை திரும்ப அழைத்தார். மேலும் உருக்னுதீனை அவரது வாரிசாக பிரபுக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். [6]

ஆட்சி தொகு

தனது தந்தை இல்த்துத்மிசு இறந்த பிறகு, உருக்னுதீன் ஏப்ரல்-மே 1236 இல் அரியணை ஏறினார் [3] இல்த்துத்மிசின் மரணத்திற்குப் பிறகு தில்லி சுல்தானகம் பலவீனமடையும் என்று கருதிய சைபுதீன் ஹசன் கர்லுக், அந்த நேரத்தில் இந்தியாவின் மீது படையெடுத்தார். இருப்பினும், இல்த்துத்மிசால் உச் பகுதியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த சைபுதீன் ஐபக் என்கிற ஒரு துருக்கிய அடிமை அதிகாரி அவரை தோற்கடித்து பின்வாங்க வைத்தார்.[7]

கிளர்ச்சிகள் தொகு

ஷா துர்கன் முதலில் தொண்டு மற்றும் மத நன்கொடைகளுக்கு பெயர் பெற்றவர், ஆனால் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு அவரது இயல்பு மாறியது. இல்த்துத்மிசின் அந்தப்புரத்திலுள்ள பெண்களை அவர் தவறாக நடத்தினார். அவரும் உருக்னுதீனும் இல்த்துத்மிசின் இளம் மற்றும் பிரபலமான மகனான குதுபுதீனைக் கொல்லவும் உத்தரவிட்டனர். இது பல கிளர்ச்சிகளைத் தூண்டியது: [8]

சிறை மற்றும் மரணம் தொகு

உருக்னுதீன் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட குக்ராம் நோக்கிச் சென்றார். [8] இதற்கிடையில், தில்லியில், இவரது ஒன்றுவிட்ட சகோதரி ரசியா இவரது தாய் ஷா துர்கனுக்கு எதிராக பொது மக்களைத் தூண்டினார். பல பிரபுக்களும் இராணுவமும் ரசியாவுக்கு ஆதரவாக இருந்து அவரை அரியணையில் அமர்த்தினார்கள். உருக்னுதீன் மீண்டும் தில்லி மீது படையெடுத்துச் சென்றார். ஆனால் ரசியா பேகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 19 நவம்பர் 1236 அன்று தூக்கிலிடப்பட்டார். உருக்னுதீன் 6 மாதங்கள் மற்றும் 28 நாட்கள் ஆட்சி செய்தார். [9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 K. A. Nizami 1992, ப. 234-235.
  2. 2.0 2.1 Sunil Kumar 2006, ப. 97.
  3. 3.0 3.1 K. A. Nizami 1992, ப. 234.
  4. K. A. Nizami 1992, ப. 230.
  5. K. A. Nizami 1992, ப. 230-231.
  6. 6.0 6.1 K. A. Nizami 1992, ப. 231.
  7. K. A. Nizami 1992, ப. 236-237.
  8. 8.0 8.1 K. A. Nizami 1992, ப. 235.
  9. K. A. Nizami 1992, ப. 236.

உசாத்துணை தொகு

  • K. A. Nizami (1992). "The Early Turkish Sultans of Delhi". In Mohammad Habib; Khaliq Ahmad Nizami (eds.). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526). Vol. 5 (Second ed.). The Indian History Congress / People's Publishing House. இணையக் கணினி நூலக மைய எண் 31870180.
  • Sunil Kumar (2006). "Service, Status, and Military Slavery in the Delhi Sultanate". In Indrani Chatterjee; Richard M. Eaton (eds.). Slavery and South Asian History. Indiana University Press. pp. 98–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-11671-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருக்னுதீன்_பிரோசு&oldid=3877029" இலிருந்து மீள்விக்கப்பட்டது