உருட்டுக் கண்ணிமுடிச்சு

உருட்டுக் கண்ணிமுடிச்சு (Rolling hitch) என்பது ஒரு கயிற்றை தண்டு, கழி அல்லது இன்னொரு கயிறு போன்றவற்றுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். ஒரு எளிமையான உராய்வுக் கண்ணிமுடிச்சான இது பொருட்களின் நீளத் திசையில் இழுவையைக் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. பாய்க் கப்பல்களில் பாய்மரக் கயிறுகளில் ஏற்படக்கூடிய சிக்குகளைப் போக்கும் நோக்கில் அக் கயிறுகளின் குறிப்பிட்ட பகுதியை இழுவிசையில் இருந்து விடுவிப்பதற்குப் பயன்படுகின்றது.

உருட்டுக் கண்ணிமுடிச்சு
பெயர்கள்உருட்டுக் கண்ணிமுடிச்சு, மக்னசுக் கண்ணிமுடிச்சு
வகைகண்ணி
தொடர்புTaut-line hitch, Icicle hitch
பொதுப் பயன்பாடுபாய்க்கப்பல்
ABoK
  1. 503, #1190, #1465, #1681, #1734, #1735, #1736, #1791, #2555
Names and reference numbers from ABOK, left to right: "உருட்டுக் கண்ணிமுடிச்சு(1)" (#1734), "உருட்டுக் கண்ணிமுடிச்சு(2)" (#1735), "மக்னசுக் கண்ணிமுடிச்சு" (#1736)

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த முடிச்சை மக்னசுக் கண்ணிமுடிச்சு என அழைத்தனர். உருட்டு முடிச்சில் சிறிது வேறுபாடுகளைக் கொண்ட இரண்டு வகைகள் உள்ளன. ஆசிலியின் நூலில் இவை உருட்டுக் கண்ணி முடிச்சு(1), உருட்டுக் கண்ணிமுடிச்சு(2) எனப் பெயரிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இந்நூலில் இவை முறையே #1734, #1735 என்னும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைவிட ஆசிலியின் நூலில் #1736 எண்ணால் குறிப்பிடப்படும் முடிச்சுக்கு மக்னசுக் கண்ணிமுடிச்சு எனப் பெயர் கொடுத்துள்ளார்.

குறிப்புகள் தொகு


இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு