உருண்டை திரண்டை

உருண்டை திரண்டை விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்டு 1950-க்குப் பிறகு மறைந்துவருகிறது.[1]

விளையாடும் முறை தொகு

பட்டவன் குனிந்துகொள்வான்.
அவன் முதுகில் எல்லாரும் கையை வைத்திருப்பர்.
அவர்களில் ஒருவர் கையில் பொத்தியாள் ஒரு சிறு கல்லை வைப்பார்.
அதனை அவர் கைக்குள் மூடிக்கொள்வர்.
அனைவரும் கையை எடுத்துக்கொண்டு அவரவர் கையில் கல் உள்ளது போல் நடிப்பர்.
யார் கையில் கல் உள்ளது என்று பட்டவன் கண்டுபிடிக்க வேண்டும்.
கல்லை ஒருவர் கையில் வைக்கும்போது பொத்தியாள் பாட்டுப் பாடுவார். [2]

பார்க்க தொகு

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

அடிக்குறிப்பு தொகு

  1. கட்டுரை ஆசிரியர் செங்கைப் பொதுவன் இளமையில் விளையாடிய பட்டறிவு உண்டு.
  2. உருண்ட முத்து, திரண்ட முத்து,
    ஒய்யார மான முத்து,
    தூத்துக்குடி முத்து,
    தூவா தூவா
    (தூ = பற்றிக்கொள் – திருக்குறள் – துப்பார்க்குத் துப்பாய …)

கருவிநூல் தொகு

பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருண்டை_திரண்டை&oldid=969703" இலிருந்து மீள்விக்கப்பட்டது