உருப்நாராயண் ராய்

இந்திய அரசியல்வாதி

உருப்நாராயண் ராய் (Rupnarayan Roy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தோராயமாக இவர் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த உறுப்பினராக்ச் செயல்பட்டார். பிரிக்கப்படாத வங்காளத்தில் செயற்பட்ட இவர் பின்னர் வங்காளதேசத்தின் விவசாயத் தலைவராகவும் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் வங்காள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று முதல் பொதுவுடைமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[2] இவர் ஒரு தியாகியாக இறந்தார். சில குண்டர்கள் இவரது வீட்டிற்குள் நுழைந்து இரவில் படுக்கையில் இருந்து அவரை அழைத்து தலையை துண்டித்தனர்.[3]

உருப்நாராயண் ராய்
வங்காள சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1946 - 1947
தொகுதிதினாச்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1908
புல்பாரி உபாசிலா, தினாச்பூர்
இறப்புமார்ச்சு 24, 1974
இலால்புர்தங்கா, அமர்பரி மௌசா, புல்பரி உபாசிலா, தினாச்பூர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1947 வரை)
பாக்கித்தான் பொதுவுடைமைக் கட்சி (1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு)
தேசிய அவாமி கட்சி[1](தடையின் போது பாக்கித்தான் பொதுவுடைமைக் கட்சி)
வங்காள தேச பொதுவுடைமைக் கட்சி(1968 முதல்)

ஒரு மார்க்சிய புரட்சியாளரான இவர் தெபாகா இயக்கத்தின் உயர்மட்ட அமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார். பிரித்தானிய எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராகவும் ,பிரிக்கப்படாத வங்காளத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், வங்காளதேச விடுதலைப் போரில் தேசிய அவாமி கட்சியின் கொரில்லா படையின் அமைப்பாளாராகவும் இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருப்நாராயண்_ராய்&oldid=3845880" இலிருந்து மீள்விக்கப்பட்டது