உரூத் பிளேக்கு

அமெரிக்க புவி இயற்பியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலாளர்

உரூத் ஈ பிளேக்கு (Ruth E. Blake) ஓர் அமெரிக்க புவி இயற்பியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார். யேல் பல்கலைக்கழகத்தில் இவர் புவியியல் மற்றும் புவி இயற்பியல், வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள், இரசாயன மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பாடங்களுக்கான பேராசிரியராக உள்ளார். கடல் உயிர் வேதியியல் செயல்முறைகள், தொல் காலநிலையியல் , வானியல் உயிரியல் மற்றும் நிலையான ஓரகத்தனிம புவி வேதியியல் ஆகியவற்றில் பிளேக்கின் ஆய்வு கவனம் செலுத்துகிறது. [1] [2]

உரூத் பிளேக்கு
Ruth Blake
துறைநிலவியல், புவி வேதியியல், பொறியியல், சுற்றுச்சூழலியல்
பணியிடங்கள்யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வேயின் மாநிலப் பல்கலைக்கழகம் (இளநிலை)
டெக்சாசு பல்கலைக்கழகம் (முதுநிலை)
மிச்சிகன் பல்கலைக்கழகம் (முனைவர்)

கல்வி தொகு

உரூத் பிளேக்கு வேயின் மாநில பல்கலைக்கழகத்தில் புவியியலில் இளநிலைப் பட்டமும், டெக்சாசு பல்கலைக்கழகத்தில் புவிநீர் அமைப்பியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1998 ஆம் ஆண்டில் புவி வேதியியலில் [2] முனைவர் பட்டம் பெற்றார். பிளேக்கின் முனைவர் பட்ட ஆராய்ச்சியானது நுண்ணுயிர் செயல்பாடு பாசுபேட்டுகளில் உள்ள ஆக்சிசன் ஓரிடத்தான்களை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்தியது. [3]

தொழில் மற்றும் ஆராய்ச்சி தொகு

யேல் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக இருந்தபோது, பிளேக் தனது பட்டதாரி ஆராய்ச்சி மையத்தில் ஆர்கியன் காலத்தில் கடலில் குறிப்பிடத்தக்க உயிரியல் செயல்பாடு இருந்ததைக் காட்ட பண்டைய கடல் பாசுபேட்களில் ஓரிடத்தான் ஆதாரங்களைப் பயன்படுத்தி விரிவாக்கினார். [4]

பெருங்கடல்கள், வண்டல் மற்றும் மண்ணில் உயிரியல், இரசாயன செயல்பாடு தொடர்பான பல ஆராய்ச்சி தலைப்புகளில் பிளேக்கு பணியாற்றியுள்ளார். [5] [6] ஓரிடத்தான் புவி வேதியியல் வளர்ச்சி முறைகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். [7]

விருதுகள் தொகு

பிளேக்கிற்கு புவி வேதியியல் சங்கம் எப். டபிள்யூ கிளார்க்கு விருதை 2002 ஆம் ஆண்டில் வழங்கிச் சிறப்பித்தது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Ruth Blake". Yale School of Engineering & Applied Science.
  2. 2.0 2.1 "Ruth Blake". Nautilus Live."Ruth Blake". Nautilus Live.
  3. Blake, R.E.; O'neil, J.R.; Garcia, G.A. (October 1997). "Oxygen isotope systematics of biologically mediated reactions of phosphate: I. Microbial degradation of organophosphorus compounds". Geochimica et Cosmochimica Acta 61 (20): 4411–4422. doi:10.1016/S0016-7037(97)00272-X. Bibcode: 1997GeCoA..61.4411B. https://archive.org/details/sim_geochimica-et-cosmochimica-acta_1997-10_61_20/page/4411. 
  4. Blake, Ruth E.; Chang, Sae Jung; Lepland, Aivo (April 2010). "Phosphate oxygen isotopic evidence for a temperate and biologically active Archaean ocean" (in en). Nature 464 (7291): 1029–1032. doi:10.1038/nature08952. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:20393560. Bibcode: 2010Natur.464.1029B. 
  5. D'Hondt, Steven; Jørgensen, Bo Barker; Miller, D. Jay; Batzke, Anja; Blake, Ruth; Cragg, Barry A.; Cypionka, Heribert; Dickens, Gerald R. et al. (December 24, 2004). "Distributions of Microbial Activities in Deep Subseafloor Sediments". Science 306 (5705): 2216–2221. doi:10.1126/science.1101155. பப்மெட்:15618510. Bibcode: 2004Sci...306.2216D. https://archive.org/details/sim_science_2004-12-24_306_5705/page/2216. 
  6. Greenwood, James P.; Blake, Ruth E. (November 2006). "Evidence for an acidic ocean on Mars from phosphorus geochemistry of Martian soils and rocks" (in en). Geology 34 (11): 953. doi:10.1130/G22415A.1. Bibcode: 2006Geo....34..953G. https://archive.org/details/sim_geology_2006-11_34_11/page/953. 
  7. Liang, Y.; Blake, R. E. (1 October 2006). "Oxygen isotope composition of phosphate in organic compounds: Isotope effects of extraction methods" (in en). Organic Geochemistry 37 (10): 1263–1277. doi:10.1016/j.orggeochem.2006.03.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0146-6380. 
  8. "F. W. Clarke Award". Geochemical Society. பார்க்கப்பட்ட நாள் 2020-03-15.

புற இணைப்புகள் தொகு

  • Ruth Blake publications indexed by Google Scholar
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூத்_பிளேக்கு&oldid=3780084" இலிருந்து மீள்விக்கப்பட்டது