உரோமரிஷி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார்.[1].இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார்.[2] இவர் வலைவீசும் சாதியில் பிறந்த செம்படவனுக்கும்‌ மலைக் குறத்திக்கும் மகனாகப்‌ பிறந்தவர்‌.[3] ஆனி மாதம்‌ கார்த்திகை நட்சத்திரம்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ ரிஷப ராசியில்‌ பிறந்தவர்‌.அஷ்டமா சித்தி பெற்ற பதினெண் சித்தர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

பெயர்க்காரணம்‌ தொகு

மதி அமுதப்‌ பாலினை உண்டு கள்ளமற்ற மனத்துடன்‌ உலகில்‌ சித்து புரிகின்ற பெரியோர்களின்‌ பாதங்களை நம்பியதால்‌ உரோமன்‌ என்றபெயர்‌ பெற்றேன்‌ என்று உரோமரிஷியே கூறுகிறார்‌[4].இவரின் உடல் முழுவதும் உரோமம் அடர்ந்திருக்கும்‌ அதனால்‌ இவர்‌ உரோம ரிஷி என்று காரணப் பெயர் பெற்றார் என்றும் கூறப்படுகிறது[5]

உரோமரிஷி இயற்றிய நூல்கள் தொகு

  • உரோமரிஷி வைத்தியம்1000
  • உரோமரிஷி சூத்திரம்1000
  • உரோமரிஷி ஞானம்50
  • உரோமரிஷி பெருநூல்500
  • உரோமரிஷி குறுநூல்50
  • உரோமரிஷி காவியம்500
  • உரோமரிஷி முப்பு சூத்திரம்30
  • உரோமரிஷி இரண்டடி500
  • உரோமரிஷி ஜோதிட விளக்கம்
  • நாகாரூடம்
  • பகார சூத்தரம்
  • சிங்கி வைப்பு
  • உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்[6][7].

மேற்கோள்கள் தொகு

  1. புலவர் ந.இராமகிருட்டிணன், ed. (2000). திருமூலரும் சிவயோகமும். மணிவாசகர் பதிப்பகம். p. 100. இனி பதினெண் சித்தர்களில் ஒருவரான உரோமரிஷி வாசியோகம் செய்யும் போது ஏற்படும் நிலைகளைக் கூறியுள்ளார் .
  2. 18 சித்தர்கள், ed. (மார் 06,2013). உரோமரிஷி. தினமலர் நாளிதழ். அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார் {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. ஆனைவாரி ஆனந்தன், ed. (Aug 2008). சித்த மருத்துவ வரலாறு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 140. உரோமரிஷி செம்படவனுக்கும் மலைக்குறத்திக்கும் பிறந்தவர் ;
  4. டாக்டர் இளமதி ஜானகிராமன், ed. (1990). சித்தர்களும் சமூகப்பார்வையும். குறிஞ்சிப் பதிப்பகம். p. 41. உரோமரிஷி : : மதிய முதப்பாலினை உண்டு கள்ளமற்ற மனத்துடன் உலகில் சித்து புரிகின்ற பெரியோர்களின் பாதங்களை நம்பி யதால் ' உரோமன் ' என்ற பெயர் பெற்றேன் என்கிறார் {{cite book}}: no-break space character in |quote= at position 62 (help)
  5. 18 சித்தர்கள், ed. (மார் 06,2013). உரோமரிஷி. தினமலர் நாளிதழ். அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார் {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  6. சித்தர் வரலாறு. தமிழர் நூலகம். 1999. p. 265. உரோமரிஷி இயற்றிய நூல்கள்
  7. 18 சித்தர்கள், ed. (மார் 06,2013). உரோமரிஷி. தினமலர் நாளிதழ். அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார் {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமரிஷி&oldid=3694622" இலிருந்து மீள்விக்கப்பட்டது