உலகளாவிய உணவு பாதுகாப்பு குறியீடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீடு (Global Food Security Index) 113 நாடுகளின் குறியீடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இது உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவுப் பாதுகாப்பை அளவிடுகிறது.[1] இது முதன்முதலில் 2012 இல் வெளியிடப்பட்டது. மேலும் தி எகனாமிஸ்ட்டின் புலனாய்வுப் பிரிவால் ஆண்டுதோறும் நிர்வகிக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.

உலகளாவிய உணவு உற்பத்தி தொகு

உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பு என்பது வேறுபட்ட தன்மையுடையதாய் இருக்கிறது. சில பகுதிகள் வளமான நிலம் இல்லாததால் உணவுப் பொருள் பாதுகாப்பின்மைக்கு அதிக வாய்ப்புள்ளது, அத்துடன் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து வாங்குவதற்கான போதுமான மூலதனமின்மையும் உணவுப் பாதுகாப்பின்மைக்கான வாய்ப்பாக அமைகிறது.[2]உணவுக்கான இந்தத் தேவையானது படிப்படியாக வளர்ந்து வருகிறது, குறிப்பாக வளரும் நாடுகளில், அடுத்த நான்கு பதின்ம ஆண்டுகளில் இத்தேவையானது 70%-100% வரை வளரக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.[3]பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், அதன் மூலமாக அதிக அளவிலான உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.[3]ஆனால், அந்த ஆராய்ச்சி ஏழை நாடுகளுக்கும் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடுகளுக்கும் நீட்டிக்கப்படாவிட்டால், வரும் ஆண்டுகளில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டு மதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.[2]

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Gillam, Carey (July 10, 2012). "U.S., Denmark top ranking of world's most "food-secure" countries". Reuters. பார்க்கப்பட்ட நாள் July 15, 2012.
  2. 2.0 2.1 Baryshnikova, Natalia & Klimecka-Tatar, Dorota & Kiriliuk, Olga. (2019). The Role of the Foreign Trade in Ensuring Food Security in the Countries of the World: An Empirical Analysis. System Safety: Human - Technical Facility - Environment. https://www.researchgate.net/figure/Top-5-food-exporters-and-importers-in-the-world-based-on-WTO-2018_tbl1_332101515
  3. 3.0 3.1 Baulcombe, David (October 2009). "Reaping the benefits Science and the sustainable intensification of global agriculture" (PDF). The Royal Society.