ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காமக்கூர்

காமக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்காவில் உள்ள காமக்கூரில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் 2014-2015 கல்வியாண்டில்165 மாணவ மாணவிகள் பயில்கின்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் அனைத்து மன்றங்களும் செயல்படுகின்றன. சுற்றுச்சூழல் மன்றம், செஞ்சிலுவை மன்றமும் செயல் படுகின்றன. காமனை எரித்த சிவன் கோவில் உள்ள ஊரில் உள்ள பள்ளி என்றும் கூறுவர்[சான்று தேவை]. இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் ஓவியப்போட்டியிலும், புத்தாக்க அறிவியல் விருதும், சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

சான்றுகள் தொகு