எசுடிஎசுஎசு ஜோ815+4729

எசுடிஎசெசு ஜோ81554.26+472947.5 (SDSS J081554.26+472947.5), பெரும்பாலும் அதன் பகுதி ஆயத்தொலைவுகளான ஜோ815+4729 என்று சுருக்கப்படுகிறது, இது புலி விண்மீன் குழுவில் உள்ள மிகக் குறைந்த பொன்மத்(உலோகத்)தன்மையைக் கொண்ட ஒரு விண்மீனாகும் . இது ஒப்பீட்டளவில் அதிகக் கரிமச் செறிவையும் கொண்டுள்ளது. [3] விண்மீனின் மேற்பரப்பு வெப்பநிலை 6,215 கெ. இது சூரியனில் இருந்து 7,500 ஒளி ஆண்டுகள் (2.3 கிலோபுடைநொடிகள் ) தொலைவில் உள்ளது மேலும் நம் பால்வழி மையத்தில் இருந்து 33,000 ஒளி ஆண்டுகள் (10 கிலோபடைநொடிகள்) தொலைவில் உள்ளது. [3] அதன் [ இரும்பு/நீரக] விகிதம் முதலில் -5.8 டெக்சுக்குக் கீழே இருப்பதாக நம்பப்பட்டது, இது இதுவ்வரை கண்டறியப்பட்ட குறைந்த உலோகத்தன்மை விண்மீனாக மாற்றப்பட்டது. , [3] ஆனால் 2020 இல் -5.49 டெக்சு என திருத்தப்பட்டது

எசுடிஎசுஎசு ஜோ815+4729
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lynx
வல எழுச்சிக் கோணம் 08h 15m 54.26778s[1]
நடுவரை விலக்கம் +47° 29′ 47.6013″[1]
இயல்புகள்
விண்மீன் வகைF5V[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-108[2] கிமீ/செ
Proper motion (μ) RA: -14.257 மிஆசெ/ஆண்டு
Dec.: -24.214 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)0.4089 ± 0.0685[1] மிஆசெ
தூரம்approx. 8,000 ஒஆ
(approx. 2,400 பார்செக்)
விவரங்கள் [3]
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.7 ± 0.6
வெப்பநிலை6142 ± 118 கெ
வேறு பெயர்கள்
SDSS J081554.26+472947.5, Gaia DR2 931227322991970560
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

ஜோ815+4729 கரிம/ இரும்பு விகிதம், [C/Fe] குறைந்தது 5.0 டெக்சு ஆகும். [3] இந்த விண்மீன் காலகத்தாலும் உயிரகத்தாலும் பெரிதும் செறிவூட்டப்பட்டுள்ளது, இது ஒற்றை சுழிய-உலோக சூப்பர்நோவாவால் மாசுபடுத்தப்பட்ட தொல்பழங்கால வளிம முகிலிலிருந்து உருவாகிறது. இரும்பு உள்ளிட்ட அடர்தனிமங்களின் பற்றாக்குறை, இவை பெரும்பாலும் சரிந்து விழும் மீவிண்மீன் வெடிப்பு எச்சங்கள் வழியாக விளக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 "SDSS J081554.26+472947.5". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Aguado, David S; Hernández, Jonay I. González; Prieto, Carlos Allende; Rebolo, Rafael (2018). "J0815+4729: A Chemically Primitive Dwarf Star in the Galactic Halo Observed with Gran Telescopio Canarias". The Astrophysical Journal 852 (1): L20. doi:10.3847/2041-8213/aaa23a. Bibcode: 2018ApJ...852L..20A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுடிஎசுஎசு_ஜோ815%2B4729&oldid=3831842" இலிருந்து மீள்விக்கப்பட்டது