எட்வர்டு கிரெய்கு

எட்வர்டு கிரெய்கு (Edvard Grieg, பிறப்பு சூன் 15 1843 பெர்கென், நார்வே; இறப்பு 4 செப்டம்பர் 1907) நார்வே நாட்டு இசைத் தொகுப்பாளரும் பியானோக் கலைஞரும் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவிய காதலர் காலத்தினராகிய இவர் நார்வேயின் மிகவும் புகழ்பெற்ற இசைத் தொகுப்பாளராக விளங்கினார். இவரது பியானோவிற்கென ஏ மைனரில் உருவாக்கிய கீதத்திற்காகவும் என்றிக் இப்சனின் நாடகம் பீர் கைன்ட்டிற்கு அமைத்தப் பின்னணி இசைக்காகவும் மிகவும் அறியப்படுகிறார். லிரிக் பீசஸ் போன்ற சின்னஞ்சிறு இசைத்தொகுப்புக்களில் கிரெய்கு சிறந்து விளங்கினார். மேலும் இடாய்ச்சு மொழியிலும் நார்வீஜிய மொழியிலும் சில அருமையான லீடர்களை (செருமானிய பாடல்கள்) இயற்றியுள்ளார்.

எட்வர்டு கிரெய்கு (1876)
எட்வர்டு கிரெய்கு (1891)
எலிஃப் பீட்டர்சின் சித்திரம்
எட்வர்டு கிரெய்கும் நீனா கிரெய்கும் (1899)

மேலும் அறிய தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்டு_கிரெய்கு&oldid=3235991" இலிருந்து மீள்விக்கப்பட்டது