எது நிஜம் 1956 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். வீணைக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் நாகபூஷணம், சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் எதி நிஜம் (ఏది నిజం) என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு, தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1][2] இத்தாலியத் திரைப்படமான Puzitor என்ற படத்தின் கதையைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

எது நிஜம்
இயக்கம்எஸ். பாலச்சந்தர்
தயாரிப்புகண்டசாலா கிருஷ்ணமூர்த்தி
கதைசங்கர சத்யநாராயணா
திரைக்கதைதஞ்சை டி. கே. கோவிந்தன்
இசைமாஸ்டர் வேணு
நடிப்புநாகபூஷணம்
சௌகார் ஜானகி
கும்முடி வெங்கடேஸ்வர ராவ்
ரமணா ரெட்டி
வெளியீடு1956
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதைச் சுருக்கம் தொகு

ஒரு கிராம முன்சீப்பின் அக்கிரமத்தையும், அதிகாரத்தையும் மூலமாகக் கொண்டது இத்திரைக்கதை. கோதண்டன் ஒரு கிராமத் தொழிலாளி. அவனது மனைவி லட்சுமி. அந்தக் கிராமத்தின் முன்சீப் ஒரு தீயவன். அவன் லட்சுமியை அடைய பல வழிகளைக் கையாளுகிறான். கிராமத்திலுள்ள நாட்டு வைத்தியர், கிராம பூஜாரி மற்றும் சிலரும் அந்த முன்சீப்புக்கு உதவுகிறார்கள். கோதண்டனின் நண்பனான திருப்பதி வெளிப்படையாக முன்சீப்பை எதிர்க்கிறான். முன்சீப்பின் பல தில்லுமுல்லுகளை அம்பலமாக்குகிறான். இதனால் ஆத்திரமுற்ற முன்சீப், திருப்பதியை கொலை செய்வித்து பழியை கோதண்டன் மீது சுமத்திவிடுகிறான். இதனால் கோதண்டன் சிறைக்குச் செல்கிறான். சிறையிலிருந்து மீண்டு வந்த கோதண்டனுக்கு உண்மைகள் தெரிய வருகிறது. அவன் முன்சீப்பை தாக்குகிறான். காட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் கோதண்டனை போலீசார் கைது செய்கிறார்கள். கோதண்டன் எது நிஜம் என்பதை எப்படி நிலைநாட்டுகிறான் என்பதே மீதிக்கதையாகும்.

நடிகர்கள் தொகு

  • நாகபூஷணம் - கோதண்டன்
  • சௌகார் ஜானகி - லட்சுமி
  • கும்மடி வெங்கடேஸ்வர ராவ் - முன்சீப்
  • ரமணா ரெட்டி - நாட்டு வைத்தியர்
  • ஜகோ ராவ் - திருப்பதி
  • வேங்கட சுப்பையா - பூஜாரி

நடனம்

  • ஈ. வி. சரோஜா
  • மாடி லட்சுமி

பாடல்கள் தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு. பாடல்களை கு. மா. பாலசுப்பிரமணியம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எழுதினார்கள். சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, வி. ஜே. வர்மா, மாதவப்பள்ளி சத்யம் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர். படத்தின் ஆரம்பத்தில் வரும் சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர் பாடிய எது நிஜம் என்ற பாடலும், ஜோரான ஜோடி மாமா, சோறுண்ண வாங்க என்ற ஜிக்கி பாடிய பாடலும் பிரபலமானவை.

உசாத்துணை தொகு

பகுத்தறிவு - கலைக்கூடம். 21 செப்டம்பர் 1956. பார்க்கப்பட்ட நாள் 06 டிசம்பர் 2016. {{cite book}}: Check date values in: |accessdate= and |date= (help)

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-08-26. பார்க்கப்பட்ட நாள் 2016-12-06.
  2. Edi Nijam in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006; pp: 134-5.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எது_நிஜம்&oldid=3792237" இலிருந்து மீள்விக்கப்பட்டது