என் சமையலறையில் ஒரு யானை

என் சமையலறையில் ஒரு யானை (An Elephant in my Kitchen) என்ற புத்தகத்தை லண்டனில் பான் மேக்மில்லன் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் வெளியிட்டது. இது தென்னாப்பிரிக்க எழுத்தாளரும் இயற்கைப் பாதுகாவலருமான பிரான்சுவா மால்பி-அந்தோணி எழுத்தாளர் கட்ஜா வில்லெம்சனுடன் இணைந்து எழுதிய முதல் புத்தகமாகும்.[1][2][3]

என் சமையலறையில் ஒரு யானை
An Elephant in my Kitchen
நூலாசிரியர்பிரான்சுவா மால்பி-அந்தோணி & கட்ஜா வில்லெம்சன்
மொழிஆங்கிலம்
வகைஉண்மைக் கதை
வெளியீட்டாளர்பான் மாக்மில்லன் (இலண்டன்)
ISBN978-1-5098-6491-1

2012இல் மரணமடைந்த தென்னாப்பிரிக்காவின் குவாசுலு நடால் துலா துலா தனியார் விளையாட்டு ரிசர்வ் நிறுவனத்தைத் தொடர்ந்து நிர்வகித்து வந்த லாரன்ஸ் அந்தோணியின் மரணத்திற்குப் பிறகு பிரான்சுவா மால்பி-அந்தோணியின் கண்களிலிருந்து இந்த கதை சொல்லப்படுகிறது. மேலும் லாரன்ஸ் அந்தோணி 2009இல் வெளியிட்ட தி எலிபேண்ட் விஸ்பரின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.[4][5]

இந்த புத்தகம் 2018இல் பல வாரங்களாகத் தென்னாப்பிரிக்காவில் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது.[சான்று தேவை] ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியாவிலும் இந்தப் புத்தகம் விற்கப்பட்டது. இந்த புத்தகம் கனடாவிலும் அமெரிக்காவிலும் நவம்பர் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "An Elephant In My Kitchen: Without water, life stops". News24 (in ஆங்கிலம்). Archived from the original on 12 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 October 2018.
  2. "An Elephant in My Kitchen – Francoise Malby Anthony". Polity.org.za. பார்க்கப்பட்ட நாள் 11 October 2018.
  3. "Françoise Malby-Anthony shares lessons learnt from 'An Elephant In My Kitchen'". பார்க்கப்பட்ட நாள் 11 October 2018.
  4. "Talking Books Ep 25: 'An Elephant in My Kitchen' book by Francoise Malby-Anthony - CNBC Africa". CNBC Africa. 5 September 2018. Archived from the original on 11 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 October 2018.
  5. "'An Elephant in My Kitchen' a must-read for wildlife lovers". பார்க்கப்பட்ட நாள் 11 October 2018.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_சமையலறையில்_ஒரு_யானை&oldid=3661900" இலிருந்து மீள்விக்கப்பட்டது