என் சுயசரிதை (நூல்)

என் சுயசரிதை என்பது நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தம் எழுதிய தன் வரலாற்று நூல் ஆகும். பிறப்பு, வளர்ப்பு, கல்வி, தொழில், நண்பர்கள் மற்றும் குடும்பம் என்று தம் அக வாழ்க்கையை இந்நூலில் எழுதியுள்ளார்.

என் சுயசரிதை
நூலாசிரியர்பம்மல் சம்பந்தம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைதன் வரலாறு
வெளியீட்டாளர்சந்தியா பதிப்பகம்
பக்கங்கள்88

நூலின் நோக்கம் தொகு

பிறந்ததைப் பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இறந்ததைப் பற்றியும் மற்றவர்கள் பின் கூற வேண்டுமல்லவா? என்று முதல் பாடத்திலே முன்னுரையாக மொழிகிறார்.

தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் என்று எல்லாராலும் இவர் போற்றப்பட்டாலும் தம் சாதிப் பெயரை இணைத்துக் கொள்வதில்லை என்று இந்நூலில் குறிப்பிடுகிறார். சாதி வேறுபாடுகள் தீண்டாமை கட்சி வேறுபாடுகள் ஒழிந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தம் விருப்பத்தை எழுதியிருக்கிறார்.

உள் தலைப்புகள் தொகு

  • என் இளம்பருவச் சரித்திரம்
  • என் தாய் தந்தையர்
  • ஏழைக் குடும்பம்
  • தெருப் பள்ளிக்கூடங்களில் படித்தது
  • நடுப் பருவம்
  • வக்கீலாக வேலை பார்த்தது
  • முதிர் பருவம்
  • 55 வயதுக்கு மேற்பட்ட பருவம்
  • நான் கோயில் தருமக் கர்த்தாவாக வேலை பார்த்தது
  • நான் எந்தக் கட்சியையும் சேராதது.
  • தமிழ் நாடகத்திற்காக நான் உழைத்தது
  • நாடக சம்பந்தமான நூல்கள்
  • பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது
  • இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறு தொண்டுகள்
  • மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தது
  • தினசரிப் பட்டி
  • எங்கள் இல்வாழ்க்கை
  • என் தாய் தந்தை போதித்த நீதிகள்

நூலில் பெறப்படும் முகாமையான கருத்துகள் தொகு

  • கடன் இல்லா வாழ்வே கண்ணிய வாழ்வு
  • குறித்த காலப்படி நடத்தல்
  • தற்காலத்திய நாகரிகத்திற்கு தனித்தனி குடும்ப வாழ்வே ஏற்றது.

சான்று தொகு

என் சுயசரிதை - நூல் ஆசிரியர்: பம்மல் சம்பந்தம், சந்தியா பதிப்பகம், சென்னை-83

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_சுயசரிதை_(நூல்)&oldid=3297691" இலிருந்து மீள்விக்கப்பட்டது