என் மனைவி

சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் மனைவி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, நாகர்கோவில் கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

என் மனைவி
இயக்கம்சுந்தர் ராவ் நட்கர்ணி
தயாரிப்புசரஸ்வதி சினி பிலிம் லெபரட்டரி
கதைஜி. பி. தேவால்
மூலக்கதைமராத்தி புதினம்: சம்சாய் கலோல் (1916)
திரைக்கதைசுந்தர் ராவ் நட்கர்ணி
இசைசரசுவதி ஸ்டோர்ஸ் அர்க்கெஸ்ட்ரா
நடிப்புகே. சாரங்கபாணி
நாகர்கோவில் கே. மகாதேவன்
நடேச ஐயர்
கிருஷ்ண ஐயங்கார்
எம். கே. மீனலோசனி
ஆர். பத்மா
டி. ஆர். சந்திரா
கே. ஆர். செல்லம்
பாடலாசிரியர்டி. கே. சுந்தர வாத்தியார்
ஒளிப்பதிவுடி. முத்துசுவாமி
படத்தொகுப்புசுந்தர் ராவ் நட்கர்ணி
கலையகம்பிரகதி பிக்சர்சு, மதராஸ்
விநியோகம்ஃபேமஸ் டாக்கி
வெளியீடு1942
நீளம்16977 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தயாரிப்பு விபரம் தொகு

1941 ஆம் ஆண்டு வெளியான சபாபதி திரைப்படம் வெற்றி பெற்றதால் ஏற்பட்ட உற்சாகத்தினால் அவிச்சி மெய்யப்பச் செட்டியார் அதே பாணியில் மற்றொரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். மராட்டிய திரையுலகில் இயக்குநராக விளங்கிய சுந்தர் ராவ் நட்கர்ணி அப்போது சாந்த சக்குபாய் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிலும் காலெடுத்து வைத்திருந்தார். அவரை ஏ. வி. எம். செட்டியார் தனது அடுத்த படத்துக்கு இயக்குநராக நியமித்தார். மராட்டிய மொழியிலான ஒரு சமூக நகைச்சுவைக் கதையை தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் திரைப்படத்தில் இன்னொரு புதிய அம்சத்தையும் புகுத்தினார்கள். அதுவரை புராணப் படங்களில் நாரதர் வேடத்தில் நடித்து வந்த நாகர்கோவில் மகாதேவனை ஒரு உல்லாச வாலிபன் பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள்.

நடிகர்கள் தொகு

என் மனைவி பாட்டுப் புத்தகத்தில் இருந்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டது.[2]

நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
கே. சாரங்கபாணி வேம்பு ஐயர்
நாகர்கோவில் கே. மகாதேவன் தனபால் குப்தா
எஸ். ஆர். கிருஷ்ண ஐயங்கார் கோபால் குப்தா
ஆர். நடேசையா (ரல்லபந்தி நடேசன்) சமையல்கார சுப்பு
அப்புடு அப்பாயி

ஏனையோர்: என். எஸ். கண்ணன், கே. எஸ். ஜகதீசுவர ஐயர், கே. வி. சொர்ணப்பா, கணபதி பட், கே. வி. சண்முகம்.

நடிகைகள்
நடிகை பாத்திரம்
எம். கே. மீனலோசனி ரேவதி
கே. ஆர். செல்லம் செல்லம்
வி. எம். பங்கஜம் பேபி
ஆர். பத்மா சுவாதி
டி. ஆர். சந்திரா ரோகிணி
டி. என். சந்திரம்மா தனம்மாள்
லெட்சுமிகாந்தம் தாரிகா

பாடல்கள் தொகு

பாடல்களை டி. கே. சுந்தர வாத்தியார் எழுதினார். சரஸ்வதி ஸ்டோர் வாத்தியக் குழுவினர் பின்னணி இசை வழங்கினார்கள். சங்கடமான சமையலை விட்டு .. என்ற பாடல் பிரபலமானது. இப்பாடலை ஆர். நடேசன் பாடினார். என்னிலும் அவள் .. என்ற பி. ஏ. பெரியநாயகி பாடிய பாடலுக்கு ஆர். பத்மா நடனம் ஆடினார்.

எண் பாடல் பாடியோர்
1 என்னிலும் அவள் உமக்கு ஏற்றவளோ சுவாமி பி. ஏ. பெரியநாயகி (இசைத்தட்டு)
2 ரகுபதே கோசலை குமாரா எம். கே. மீனலோசனி, கே. மகாதேவன்
3 அடி கோமளமே! ரேவதியே! கோபமென்னடியே எம். கே. மீனலோசனி, கே. மகாதேவன்
4 மாமழைக் காலமும் போனது ஒரு மாசமானது டி. ஆர். சந்திரா
5 பட்டணத்தைப் பார்க்கப் பார்க்க பசியெடுக்கவுமில்லை ஆர். பத்மா
6 மாதரை நினையாதே நெஞ்சே கே. சாரங்கபாணி
7 பசுவினில் பால கறந்திடுறாள் எம். கே. மீனலோசனி
8 சங்கடமான சமையலை விட்டு ஆர். நடேசய்யா
9 என தன்பான ரூப படமே எம். கே. மீனலோசனி
10 ஆகா மெத்த அபூர்வ ஆக்டு எம். கே. மீனலோசனி
11 எங்கே போனாலும் போங்காணும் எம். கே. மீனலோசனி
12 ஜெகதீசா சிறீ பரமேசா எம். கே. மீனலோசனி, வி. எம். பங்கஜம்

சான்றாதாரங்கள் தொகு

  1. "En Manaivi 1942". தி இந்து. 18 ஜூலை 2008 இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125174929/http://www.hindu.com/cp/2008/07/18/stories/2008071850391600.htm. 
  2. "என் மனைவி" பாட்டுப் புத்தகம் (1942), ராஜாஜி அச்சகம், காரைக்குடி

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_மனைவி&oldid=3719374" இலிருந்து மீள்விக்கப்பட்டது