எமி பாவா

இந்திய ஓவியர் மற்றும் சிற்பி

எமி பாவா (Hemi Bawa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியரும் சிற்பியுமாவார். 1948 ஆம் ஆண்டு [1] இவர் பிறந்தார். இவரது படைப்புகளில் அக்ரைலிக்கு மற்றும் கண்ணாடி ஓவியங்களும் மற்றும் வார்ப்பிரும்பு, கண்ணாடி இழை மற்றும் தாமிரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிற்பங்களும் அடங்கும். [2]

எமி பாவா
Hemi Bawa
பிறப்புதில்லி, இந்தியா
பணிஓவியர்
சிற்பி
அறியப்படுவதுநவீன ஓவியம்
வாழ்க்கைத்
துணை
இந்திரசித்து சிங் பாவா
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
Website

பாவா தில்லியில் பிறந்தார், 1962 ஆம் ஆண்டில் ஓவியம் வரையத் தொடங்கியபோது இவருக்கு முறையான பயிற்சி எதுவும் இல்லை [3] பின்னர், இவர் இசுகாண்டிநேவிய கண்ணாடி தயாரிக்கும் நுட்பங்களைப் படித்தார். பின்னர் அந்த ஊடகத்தில் உலோகம், மரம் மற்றும் அக்ரைலிக்கு ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். [4] 1996 ஆம் ஆண்டில், அட்லாண்டாவில் நடைபெற்ற 1996 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் காட்சிப்படுத்துவதற்காக, கோகோ-கோலா ஒரு சிற்பத்தை உருவாக்க இவரை நியமித்தது, எட்டு அடி உயரத்தில் இவர் உருவாக்கிய சிற்பம் இப்போது நகரத்தில் உள்ள கோகோ-கோலா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [2] [5] இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனி மற்றும் குழு கண்காட்சிகளை பாவா நடத்தியுள்ளார். இதில் கண்ணாடி பரிமாண நிகழ்ச்சி [6] மற்றும் தில்லியில் இந்தியா கலைத் திருவிழா 2012 ஆகியவை அடங்கும். [7]

கலைத்துறையில் எமி பாவா ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது. [8] 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அல்கா பாண்டே எழுதிய எமி பாவா என்ற புத்தகத்தில் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன [9] இந்தர்சித்து சிங் பாவா என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார், மேலும் இத்தம்பதியினர் தற்போது தில்லியில் எய்லி சாலையில் வசிக்கின்றனர். [10]

மேற்கோள்கள் தொகு

  1. "Inspired by steel / by Hemi Bawa". Corning Museum of Glass. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.
  2. 2.0 2.1 "Padma Shri is a recognition of my art: Hemi Bawa". Mid Day. 11 April 2009. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
  3. "Harry Winston and Hemi Bawa". Jot Impex. 2016. Archived from the original on 16 February 2016. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
  4. "Meet the Artist – Hemi Bawa". Corning Museum of Glass. 2016. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
  5. "Sculptor Hemi Bawa's Coke bottle selected for Atlanta Olympics". India Today (in ஆங்கிலம்). May 31, 1996. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  6. "India's glass diva sparkles again". Zee News. 4 August 2009. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
  7. "Hemi Bawa explores the power of present". The Indian Express. 15 January 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
  8. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  9. Hemi Bawa.
  10. "Artistic impressions". India Today. 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.

புற இணைப்புகள் தொகு

  • "Hemi Bawa 2012". YouTube video. Artspeaks India. 1 November 2012. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமி_பாவா&oldid=3757221" இலிருந்து மீள்விக்கப்பட்டது