எம்பிரெசைட்டு

வெள்ளி தெலூரைடு கனிமம்

எம்பிரெசைட்டு (Empressite) என்பது AgTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். வெள்ளி தெலூரைடின் ஒரு வடிவம் எம்பிரெசைட்டு எனக் கருதப்படுகிறது. அரியவகை கனிமமான இது சாம்பல் நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகங்களாகக் காணப்படுகிறது.அரிதாக இரட்டைக்கூர்நுனி கோபுர வடிவத்திலும் இது படிகமாகிறது.

எம்பிரெசைட்டுEmpressite
தாம்சுடோன் மாவட்டத்திலுள்ள யோ சுரங்க எம்பிரெசைட்டு
பொதுவானாவை
வகைதெலூரைடு கனிமம்
வேதி வாய்பாடுAgTe
இனங்காணல்
நிறம்வெளிர் பித்தளை
படிக இயல்புமணிகள்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
பிளப்புஇல்லை
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பல் கருப்பு கீற்றுகள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது]
ஒப்படர்த்தி7.6
ஒளியியல் பண்புகள்ஒளிபுகாது
பலதிசை வண்ணப்படிகமைவலிமையானது, சாம்பல் கலந்த வெண்மை
மேற்கோள்கள்[1][2][3]

எம்பிரெசைட்டு கனிமம் தனித்துவமான நேர்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் உள்ளது என சமீபத்திய படிகவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன[4]. இதனால் எம்பிரெசைட்டு கனிமம் அறுகோண Ag5−xTe3 கட்டமைப்பில் உள்ளதென்று கருதப்பட்ட கனிமவியல் கருத்து கைவிடப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தது.

அதேசமயத்தில் Ag-Te கட்ட சமநிலை வரைபடத்தில் எம்பிரெசைட்டு தோன்றுவதில்லை[5] . எனவே சுற்றுப்புற சுழல் நிபந்தனைகளில் சிற்றுறுதி நிலையில் மட்டுமே காணப்படுகிறது. முடிவிலா நேரத்தில் இந்நிலையிலிருந்து தூய்மையான Ag5Te3 மற்றும் தூய்மையான Te பிரிகின்றன.

1914 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள சகுவாச்சே மாகாணத்தின் எம்பிரெசு யோசபின் சுரங்கத்தில் கண்டறியப்பட்டதால் கனிமத்திற்கு எம்பிரெசைட்டு என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. http://rruff.geo.arizona.edu/doclib/hom/empressite.pdf Handbook of Mineralogy
  2. http://www.webmineral.com/data/Empressite.shtml Webmineral
  3. http://www.mindat.org/min-1379.html Mindat
  4. L. Bindi et al., American Mineralogist, 89, 1043 (2004)
  5. Karakaya, I., Thompson, W.T.: J. Phase Equilibria 12, 56 (1991).
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்பிரெசைட்டு&oldid=2919268" இலிருந்து மீள்விக்கப்பட்டது