எய்யாபியாட்லயாகுட் எரிமலை

எய்யாபியாட்லயாகுட், (ஒலிப்புதவி - ஏபிசி நியூசு [1]) ஐசுலாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும்.இதன் பனிக்கவிகை ஒரு எரிமலையை மூடியுள்ளது; இந்த எரிமலையின் உயரம் 1,666 மீ (5,466 அடி) ஆகும்.இந்தப் பனியாறு 100 கி.மீ (39 ச.மைல்) பரப்பளவு கொண்டதாகும். மலையின் தெற்குமுனை முன்பு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கடற்கரையை அடுத்திருந்தது. ஆனால் கடல் 5 கி.மீ வரை உள்வாங்கியதால் முன்பு கடற்கரையிருந்த இடத்தில் பல அழகிய அருவிகளைக் கொண்ட மலைமுகடுகள் காணக்கிடைக்கின்றன.

Map showing the location of
Map showing the location of
ஐசுலாந்தில் பனியாறு உள்ள இடம்
அமைவிடம்ஐசுலாந்து
பரப்பளவு100 km2 (40 sq mi)
27 மார்ச் 2010 ஆண்டின் எரிமலை சீற்றம்

எரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது. இது 920, 1612,மற்றும் 1821-1823 ஆண்டுகளில் வெடித்துள்ளது. [1] அண்மையில் 2010ஆம் ஆண்டு 20 மார்ச் மற்றும் 14 ஏப்ரல் நாட்களில் புகை கக்கி வருகின்றது. மார்ச் வெடிப்பின்போது ஏறத்தாழ 500 உள்ளூர் மக்கள் வெளியேற்றப்பட்டனர். [2][3] ஏப்ரல் வெடிப்பு இதனைவிட பத்து,இருபது மடங்கு வலுவாக இருந்ததினால் வடக்கு ஐரோப்பாவில் பெருமளவில் வான்வழிப் போக்குவரத்தை பாதித்துள்ளது. இதன் எரிமலை வெடிப்புத்தன்மை எண் (Volcanic Explosivity Index - VEI )நான்கு என கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. ""Last Eyjafjallajökull Eruption Lasted Two Years", Iceland Review". Icelandreview.com. Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.
  2. ""Iceland's hottest ticket — volcano tourism", The". Guardian. பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.
  3. Associated Press (2010-03-25). ""Volcano erupts in Iceland" Hundreds of people evacuated from areas near glacier but no immediate reports of damage or injuries, The". Guardian. பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.

வெளியிணைப்புகள் தொகு

ஒளிப்படங்கள்
காணொளிகள்
புவியியல் கட்டுரைகள்