எலி (சீன சோதிடம்)

எலி சீன சோதிடத்தின் முதல் குறி ஆகும். 1924, 1936, 1948, 1960, 1972, 1984, 1996, 2008, 2020, 2032 ஆகிய வருடங்கள் எலி வருடங்கள் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் வசீகரமும், போராடும் குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

பெயர்க்காரணம் தொகு

புத்தர் முக்தி அடைந்து இந்த உலகை விட்டுச்செல்லும் போது, இந்த உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் சந்திக்க வேண்டி அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் நடக்கவிருந்த முந்தைய நாள் பூனை தனது நண்பனான எலியிடம் கூட்டம் பற்றி கூறிவிட்டு, காலையில் முதலில் எழுபவர் மற்றவரை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டு தூங்கச்சென்றது. மறுநாள் காலையில் எழுந்த எலி, தான் மட்டுமே முதலில் செல்ல எண்ணி பூனையை எழுப்பாமல் தனியே சென்றது. இவ்வாறு கூட்டத்திற்கு முதலில் சென்ற எலியையே புத்தர் முதல் வருடத்திக்கான சின்னமாக்கினார். இதன் பிறகு கூட்டத்திற்கு எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகியவை வரிசையாக வந்தன. தாமதமாக விழித்த பூனை கூட்டம் நடந்த இடத்திற்கு வந்த போதுதான், அங்கு கூட்டம் எற்கனவே முடிந்துவிட்டதை அறிந்தது. அன்று முதல் எலி பூனைக்கு பகையாகியது.

இது எலி, முதல் வருடச்சின்னமாக வந்ததின் காரணமாக சீனாவில் கூறப்படும் கதை ஆகும்.

இயல்புகள் தொகு

   
நேரம் இரவு 11:00 முதல் 1:00 வரை
உரிய திசை மேற்கு
உரிய காலங்கள் குளிர்காலம் (திசம்பர்)
நிலையான மூலகம் நீர்
யின்-யான் யான்
ஒத்துப்போகும் விலங்குகள் டிராகன், எருது, குரங்கு
ஒத்துப்போகாத விலங்குகள் குதிரை, முயல், சேவல், ஆடு


இராசி அம்சங்கள் தொகு

   
இராசி எண்கள் 1, 4, 5, 10, 11, 14, 41, 45, 51, 54
இராசி நிறம் கருப்பு, சிகப்பு, வெள்ளை
இராசிக் கல் கார்னெட்

எலி வருடத்தைய பிரபலங்கள் தொகு

எலி வருடத்தில் உதயமான நாடுகள் தொகு

இதையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=எலி_(சீன_சோதிடம்)&oldid=3538057" இலிருந்து மீள்விக்கப்பட்டது