எழில் விளையாட்டு

சங்ககாலத்தில் மகளிரின் அழகை மகளிரே ஆராய்ந்து மதிப்பிட்டனர்.[1] இப்படி ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு ஏதுவாக மகளிர் தன்னை ஒப்பனை செய்துகொண்டு ஒய்யாரமாக நடந்து காட்டியிருக்கின்றனர். ஒருத்தி தனது கூந்தலில் பாதிரிப் பூவையும் அதிரல் பூவையும் தனித்தனியாகக் கட்டிச் சேர்த்துச் சூடிக்கொண்டாள். மராம் பூவைக் கையிலே வைத்துக்கொண்டு வளையல் குலுங்க கைகளை வீசிக்கொண்டும், சிலம்பொலி கேட்கும்படி மெல்ல மெல்ல அடி வைத்தும் நடந்து காட்டியிருக்கிறாள். [2]

இவற்றையும் பார்க்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. கடலங்கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்த்து – குறுந்தொகை 245
  2.  
    கானப் பாதிரி கருந் தகட்டு ஒள்வீ
    வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
    சில் ஐங் கூந்தல் அழுத்தி மெல் இணர்த்
    தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
    இயங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
    சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி – அகம் 261

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழில்_விளையாட்டு&oldid=3208400" இலிருந்து மீள்விக்கப்பட்டது