எவ்ஜெனியா மரியஞ்சென்கோ

சோவியத் கட்டடக்கலைஞர் (1916-1999)

எவ்ஜெனியா மரியஞ்சென்கோ (Yevheniya Marynchenko, (உக்குரைனியம்: Маринеенооовен О Оленсандр )на; 18 திசம்பர் 1916 – 15 சூன் 1999) என்பவர் ஒரு உக்ரேனிய கட்டடக் கலைஞர் ஆவார். பேலஸ் "உக்ரைன்" திட்டத்தை உருவாக்கியதற்காக 1971 ஆம் ஆண்டு ஷெவ்சென்கோ பரிசைப் பெற்றவர்.

எவ்ஜெனியா மரியஞ்சென்கோ
தாய்மொழியில் பெயர்Маринченко Євгенія Олександрівна
பிறப்பு(1916-02-28)28 பெப்ரவரி 1916
சென் பீட்டர்சுபெர்கு, உருசியப் பேரரசு
இறப்பு15 சூன் 1999(1999-06-15) (அகவை 83)
கீவ், உக்ரைன்
தேசியம்உக்குரைனினயன்
படித்த கல்வி நிறுவனங்கள்கீவ் தேசிய கட்டுமான மற்றும் கட்டிடக்கலை பல்கலைக்கழகம்
பணிகட்டடக்கலைஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அரண்மனை "உக்ரைன்" (இணை கட்டிடக் கலைஞர்), புஷ்சா-ஓசெர்னா சானடோரியம்
பாணிஸ்ராலினிச கட்டடக்கலை, நவீனவியம்
விருதுகள்ஷெவ்செங்கோ தேசிய பரிசு, ஆர்டர் ஆஃப் தி பேட்ஜ் ஆஃப் ஹானர், ஆர்டர் ஆஃப் தி ரெட் பேனர் ஆஃப் லேபர்

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

மேரிஞ்சென்கோ 1916 இல் ஒரு கட்டடக் கலைஞர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா யெவ்ஹெனி டால்ஸ்டாய் ஒரு கட்டடக் கலைஞரும், பொறியியலாளரும் ஆவார். அவர் மரின்ஸ்கி அரண்மனையின் தலைவராக பணியாற்றினார்.

மரின்சென்கோவின் பெற்றோரும் கீவ் கலைப் பள்ளியில் கட்டிடக்கலைத் துறையில் பட்டம் பெற்றவர்களாவர். இவரது தந்தை, ஒலெக்சாண்டர், கீவ் கலைக் கல்வி நிறுவனத்தில் தனது படிப்பைப் பயின்றவர், நன்கு அறியப்பட்ட கட்டடக் கலைஞர், நூல் ஆசிரியர், கீவில் கட்டடக்கலை பற்றிய புத்தகங்களை எழுதியவர், மேலும் கட்டிடக்கலை அறிவியலில் பட்டம் பெற்றவர்.

பள்ளியில் இவர் ஓவியப் பாடங்களை விரும்பினார். இனதால் பள்ளி செய்தித்தாளின் ஆசிரியர் குழுவில் ஓவியராக பணியாற்றினார். வீட்டில், இவர் அவ்வப்போது நீர்வண்ண ஓவியங்களை வரைந்தார். குறிப்பாக இவர் இயற்கை காட்சிகளை நேரடியாக கண்டு அவற்றை நேரடியாக ஓவியமாக வரைவதை விரும்பினார்.

1931 ஆம் ஆண்டில், ஏழு ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து, கட்டுமான தொழில்நுட்ப பள்ளியின் கட்டடக்கலை பீடத்தில் நுழைந்தார்.

தொழில் தொகு

1934 முதல், இவர் கட்டுமானத் துறையில் பணிபுரிந்தார். தன்னை ஒரு திறமையான, பொறுப்பான மேலாளராக நிரூபித்தார். கட்டடக்கலை வடிவமைப்பு பட்டறை ஒன்றில் கட்டடக் கலைஞரின் உதவியாளராக பணியாற்றினார்.

1935-1941 இல், இவர் பிரபல கட்டடக் கலைஞர்களான ஒலெக்சாண்டர் வெர்பிட்ஸ்கி மற்றும் பெட்ரோ யுர்சென்கோ ஆகியோரின் கீழ் கீவ் பொறியியல் மற்றும் கட்டுமான கல்வி நிறுவனத்தில் படித்தார். இந்த நேரத்தில், "கிவில் உள்ள ஆர்சனல் தொழிற்சாலையின் கலாச்சார அரண்மனை" என்ற தலைப்பில் தனது ஆய்வேட்டை எழுதினார்.

1943 முதல், இவர் கியேவில் போரால் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பில் பணியாற்றினார். அந்த திட்டத்தில் கீவ் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள், மரின்ஸ்கி அரண்மனை, கிரெஷ்சாதிக்கில் உள்ள முன்னாள் வங்கி கட்டடம், கேபிஐ அவை மண்டபம் போன்றவற்றில் பணியாற்றினார். மேலும் 1945 முதல் "டிப்ரோசிவில்ப்ரோம்புட்" திட்ட நிறுவனத்தில் பணியாற்றினார்.

 
சானடோரியத்தின் நீர் சுத்திகரிப்பு கட்டிடம் (1948-1949)
 
அரண்மனை"உக்ரைன்"

யெவ்ஜீனியாவின் வேலைகளில் முதல் குறிப்பிடத்தக்க பணி புஷ்சா-வோடிட்சியாவில் உள்ள நீர் சுத்திகரிப்பு சுகாதார வளாகத் திட்டம் ஆகும். அந்த நேரத்தில் அது கிவ் நகர எல்லைக்கு வெளியே அமைந்திருந்தது. மருத்துவ வளாகத் திட்டம் 1946 இல் உருவாக்கப்பட்டது. மேலும் வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது.

"சோவியத் உக்ரைனின் 30 ஆண்டுகள்" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சானடோரியத்தை வடிவமைத்து அதில் பங்கேற்பதற்காக, 1949 இல் கட்டுமானப் பொறியியிலில் சிறந்த கட்டமைக்கப்பட்ட பொருட்களுக்கான குடியரசு போட்டியில் யெவ்ஹெனியா மரின்சென்கோவுக்கு பரிசும் கௌரவச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

1990 களில் "புஷ்சா-ஓசெர்னா" என்று பெயர் மாற்றபட்ட சானடோரியத்தின் அசல் மையமானது, 20 ஆம் நூற்றாண்டின் முதல் போருக்குப் பிந்தைய தசாப்தத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டடக்கலை நினைவுச்சின்னமாக உள்ளது.[1]

சானடோரியம் வளாகப் பணிகளுடன், இவர் பல்வேறு நோக்கங்களுக்காக 70 க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களை உருவாக்கினார், இதில் 30 இக்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, அவற்றுள்:

  • நாகிர்னியா, ஸோலோடோஸ்டிவ்ஸ்கா, பாஸ்டியன்னியா, மைக்கைலோ பாய்ச்சுக் தெருக்கள், போவிட்ரோஃப்ளோட்ஸ்கி அவென்யூவில் உள்ள கீவில் குடியிருப்பு வீடுகள்;
  • ஒடெசா, கெர்சன் மற்றும் கார்கீவ்; ஆகிய இடங்களில் புதிய குடியுருப்புகள்.
  • கியேவில் உள்ள நோவோபிலிச்சி வீட்டுத் தோட்டம்;
  • நோவோகியிவ்கா கிராமத்திற்கு அருகிலுள்ள தென்-உக்ரேனிய கால்வாயின் தொழிலாளர் கிராமம்;

1960 களின் தொடக்கத்திலிருந்து, மிகவும் குறிப்பிடத்தக்க திட்டத்தில் ஒரு படைப்புக் குழுவில் இவர் பணியாற்றினார். அது "உக்ரைன்" அரண்மனையின் கட்டுமானம் ஆகும்.

1971 ஆம் ஆண்டில் மரின்சென்கோவுக்கு இவரது அணியுடன் சேர்த்து உக்ரைனிய சோவியத் குடியரசு தாராஸ் ஷெவ்சென்கோ மாநில பரிசும், "உக்ரைன்" அரண்மனையை நிர்மாணித்ததற்காக "உக்ரேனிய உக்ரைனிய சோவியத் குடியரசின் மதிப்பிற்குரிய கட்டடக் கலைஞர்" என்ற கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டது. 1990 களில், அந்தக் கட்டடம் கட்டடக்கலை நினைவுச்சின்னத்தின் பாதுகாப்பு நிலையைப் பெற்றது.[2]

1973 ஆம் ஆண்டில் (பிப்ரவரி–மார்ச்) இவர் ஒரு நிபுணர் குழுவுடன் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டார், அங்கு இவர் பாக்தாத்தில் கலாச்சார அரண்மனையை உருவாக்குவதற்கான திட்ட ஓவியங்களை உருவாக்கினார்.

1975 ஆம் ஆண்டில், இவர் எழுதிய, "உக்ரைன்" கியேவில் கலாச்சார அரண்மனை" என்ற புத்தகத்தின் முதல் பதிப்பு உக்ரேனியம், உருசியம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. நூலில் இரண்டாவது பதிப்பு 1979 இல் வெளியிடப்பட்டது.[3]

1980 முதல் இவரது இறப்பு வரை, இவர் கீவில் மாலா சைட்டோமிர்ஸ்கா ஸ்ட்ரா., 10 என்ற முகவரியில் வாழ்ந்தார். இவரது இறுதி காலத்தில், இவர் வரலாற்று மற்றும் கலாச்சார நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதற்கான உக்ரேனிய சங்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். இவர் 1999 சூன் 15 அன்று இறந்தார்.[4]

குறிப்புகள் தொகு

  1. "Про занесення об'єктів культурної спадщини до Державного реєстру нерухомих пам'яток України". Офіційний вебпортал парламенту України (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
  2. "Про включення Палацу культури "Україна" в м. Києві до списку пам'яток архітектури України, що перебувають під охороною держави". Офіційний вебпортал парламенту України (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
  3. Маринченко, Євгенія (1975). Палац культури "Україна" в Києві. "Будівельник". பக். 63. 
  4. "Житловий будинок 1969, в якому проживали Вірський П. П., Дерегус М. Г., Маринченко Є. О. | Звід Історїї Памяток Києва". web.archive.org. 2022-05-04. பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவ்ஜெனியா_மரியஞ்சென்கோ&oldid=3915526" இலிருந்து மீள்விக்கப்பட்டது