ஏ. எம். எசு. ஜி. அசோகன்

இந்திய அரசியல்வாதி

ஏ. எம். எசு. ஜி. அசோகன் (A. M. S. G. Ashokan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார்.[1]

வணிகவியல் பட்டதாரியான அசோகன், 1996 முதல் காங்கிரசு கட்சி உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2006 முதல் 2011 வரை சிவகாசி பேரூராட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இவரது தந்தை ஏ. எம். எசு. கணேசனும் 1967 முதல் 1974 வரை சிவகாசி நகராட்சியின் தலைவராகவும், மூத்த சகோதரர் சேவா தளத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் அரசன் கணேசன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu state assembly election 2021: Winning candidates across all constituencies". Business Insider. 3 May 2021. https://www.businessinsider.in/politics/elections/news/checkout-leading-candidates-list-of-tamil-nadu-assembly-election-2021/articleshow/82353685.cms. 
  2. "Congress fields two first-timers in Sivakasi, Srivilliputtur Assembly seats" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/national/tamil-nadu/congress-fields-two-first-timers-in-sivakasi-srivilliputtur-assembly-seats/article34066720.ece. 
  3. "YesGo launches premedia services arm- SGO" (in அமெரிக்க ஆங்கிலம்). Print Week. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._எசு._ஜி._அசோகன்&oldid=3741739" இலிருந்து மீள்விக்கப்பட்டது