ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம்

ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம் (United Nations Office at Nairobi, UNON) ஐநாவின் நான்கு முதன்மை அலுவலக வளாகங்களில் ஒன்றாகும். கென்யாவின் நைரோபியில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் பல்வேறு ஐநா அமைப்புகளும் முகமைகளும் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இங்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், UN-HABITAT திட்டங்களின் தலைமையகம் அமைந்துள்ளன.

இந்த வளாகம் கரூரா வனத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் நிழற்சாலையில் நைரோபியின் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

2004ஆம் ஆண்டின் நவம்பரில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தெற்கு மற்றும் மேற்கு சூடான் குறித்து விவாதிக்க மிக அரிதாக தனது அமர்வை இங்கு நடத்தியது.[1] இந்த அமர்வு அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் டான்போர்த்தின் வற்புறுத்தலால் நடந்தது[2]

பங்கேற்கும் முகமைகள் தொகு

நைரோபியை தலைமையகமாகக் கொண்டவை:

நைரோபியில் உள்ளவை:

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2004-11-19. பார்க்கப்பட்ட நாள் 2004-11-19.

வெளியிணைப்புகள் தொகு