ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி

ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (மலாய்: Parti Pesaka Bumiputera Bersatu, ஆங்கில மொழி: United Traditional Bumiputera Party) என்பது மலேசியாவில் ஒரு வலதுசாரி அரசியல் கட்சியாகும். சரவாக் மாநிலத்தில் பெரிய கட்சியாகவும், ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் மிக முக்கியமான கட்சியாகவும் விளங்கி வருகிறது. இந்தக் கட்சியை பி.பி.பி. கட்சி என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
United Traditional Bumiputera Party
Parti Pesaka Bumiputera Bersatu
土著保守联合党
தலைவர்அப்துல் தாயிப் முகமட்
தொடக்கம்ஏப்ரல் 30, 1973
தலைமையகம்மலேசியா கூச்சிங், சரவாக்
இளைஞர் அமைப்புஇளைஞர் இயக்கம்
கொள்கைதேசியவாதம்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல்
மலேசிய நாடாளுமன்றம்
14 / 222
இணையதளம்
http://pbb.org.my

பூமிபுத்ரா என்றால் மண்ணின் மைந்தர் என்று பொருள்படும். ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியில் உள்ளவர்கள் பெரும்பாலும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பூமிபுத்ராக்கள் ஆவர். மலேசிய அரசியலமைப்பின் 161வது விதியின்படி சரவாக்கைச் சேர்ந்த 21 பூர்வீக இனங்களைச் சார்ந்த மக்கள், பூமிபுத்ரா தகுதியைப் பெறுகின்றனர். அவர்களில் இபான், பிடாயூ, டாயாக் சரவாக் மலாய்க்காரர்களும் அடங்குவர்.

பி.பி.பி. கட்சியின் முதல் தலைவராக துன் ஜுகா என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் சரவாக் மாநிலத்தின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். 1981-இல் அவர் காலமான பிறகு, அப்துல் தாயிப் முகமட் என்பவர் அக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார். இவர் இன்று வரையில் அக்கட்சியின் தலைவராகவும், சரவாக் மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் மிக வலுவான உறுப்புக் கட்சிகளில், பி.பி.பி. கட்சி மிக முக்கியமான கட்சியாக விளங்கி வருகிறது.

வரலாறு தொகு

சரவாக் மாநிலத்தின் மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியை உருவாக்கின. சரவாக் நெகாரா கட்சி (மலாய்: Parti Negara Sarawak (PANAS), சரவாக் அசல் மக்கள் முன்னணி (மலாய்: Barisan Rakyat Jati Sarawak (BARJASA), சரவாக் பாரம்பரிய மைந்தர் கட்சி (மலாய்: Parti Pesaka Anak Sarawak (PESAKA) ஆகிய மூன்று கட்சிகளே அவையாகும்.

இதில் சரவாக் நெகாரா கட்சி எனும் பானாஸ் கட்சி, மாநிலம் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே தோற்றுவிக்கப்பட்டது. சரவாக்கில் இரண்டாவதாக பெரிய கட்சியாகக் கருதப்பட்டது. இந்தக் கட்சி தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னர் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சிதான் (ஆங்கில மொழி: Sarawak United Peoples' Party (SUPP))முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட பெரிய கட்சியாக விளங்கியது.

சரவாக் பாரம்பரிய மைந்தர் கட்சி, 1962-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தோற்றம் கண்டது. பாத்தாங் ராஜாங் பகுதியில் வாழ்ந்த இபான் மக்களின் நலன்களைப் பேணிக் காப்பதற்காக இந்தக் கட்சி உருவானது.

சான்றுகள் தொகு

  • James Chin. “The More Things Change, The More They Remain The Same”, in Chin Kin Wah & D. Singh (eds.) South East Asian Affairs 2004 (Singapore: Institute of South East Asian Studies, 2004)

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு