ஐயம்பாறை

கேரளத்தின் கோட்டையம் மாவண்ணதில் உள்ள இடம்

ஐயம்பாறை அல்லது ஐயம்பாறா (Ayyampara) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டத்தில் எராட்டுப்பேட்டா - முடம் சாலையில் எராட்டுப்பேட்டாவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.

ஐயம்பாறை

நாட்டார் கதைகளின்படி பஞ்சபாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின்போது இந்த பாறைக்கு அருகில் அமர்ந்து இளைப்பாறினார்களாம். இந்தப் பாறை கடல் மட்டதில் இருந்து 2000 அடி உயரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் குன்றின் மூன்று திசைகளிலும் ஆழமான பள்ளதாக்கு உள்ளது. அது கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நீண்டுள்ளது. பள்ளத்தாக்குகளில், உள்ள கிராமங்கள், சிறிய வீடுகளை, நல்ல வானிலை காலங்களில் தெளிவாகக் காணலாம். ஐயம்பாறை என்ற பெயர், அஞ்சுபாறை என்ற சொல்லின் மருவு என்று சொல்லப்படுகிறது. சிலர் இங்கு உள்ள ஐயப்பன் கோயிலை அடிப்படையாக கொண்டு ஐயம்பாறை என்ற பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். ஏனென்றால் இங்குள்ள கோயிலின் மேற்கூரையாக உள்ள சமதளமான பாறையை நான்கு கற்றூண்கள் தாங்கி நிற்கின்றன. ஆக மொத்தம் ஐந்து கற்கள் என்பதால் அஞ்சுபாறை என்பதாயிற்று என்று விளக்குகின்றனர். இந்தப் பாறையின் ஒரு பக்கமுள்ள குகையானது 15க்கும் மேற்பட்டவர்கள் தங்கக்கூடிய அளவு இடவசதியோடு உள்ளது. ஐயம்பாறையில் இருந்து சூரியன் மறைவினை நன்கு கண்டு மகிழலாம். [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயம்பாறை&oldid=3436838" இலிருந்து மீள்விக்கப்பட்டது