ஐ-போன் 4எஸ் (iPhone 4S) ஆப்பிள் நிறுவனத்தின் என்பது இணையத் தொடர்பு உள்ள பல்லூடக வசதி கொண்ட நுண்ணறி பேசி. இந்த நகர்பேசி நவீன ரெடினா தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது.

ஐ-போன் 4எஸ்
iPhone 4S
ஐ-போன் 4s
முழக்கம்"ஐபோன்களில் மிகவும் வியக்கத்தக்கது இதுவே."[1]
தயாரிப்பாளர்ஃபாக்ஸ்கொன்
இயங்கு தளம்iOS 5.1
வெளியீடு மார்ச்சு 7 2012 (2012-03-07), 4426 நாட்களுக்கு முன்னதாக
உள்ளீடு4 buttons
switch
microphones, touch-screen, acceleration, orientation
CPU800 MHz dual-core Apple A5[2]
நினைவகம்512 MB[3]
பதிவகம்16, 32, or 64 GB
தொடர்பாற்றல்ஒய்-ஃபை (802.11 b/g/n) (2.4 GHz only)
புளூடூத்.0
Combined GSM/CDMA antenna: quad-band உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்/GPRS/EDGE
(800 850 900 1800 1900 MHz)
Quad-band UMTS/HSDPA/HSUPA
(800 850 900 1900 2100 MHz) (800 MHz unannounced)
Dual-band CDMA/EV-DO Rev. A (800 1900 MHz)
குளொனொஸ், GPS
எடை140 g (4.9 oz)
வடிவம்Slate நுண்ணறி பேசி
முந்தையதுiPhone 4
தொடர்புள்ளவைஐ-போன், iPad 2, iPod Touch


செயற்கூறுகள் தொகு

சிரீ தொகு

சிரீ என்பது ஒலிவடிவில் இடும் உள்ளீடுகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கும் ஒரு புதிய தொழில் நுட்பம் ஆகும். இயல்பாகப் பேசும் மொழியில் பேசினாலே புரிந்துகொண்டு இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஒலிவடிவக் கேள்வி/ஆணைகள் எல்லா மொழிகளிலும் இப்பொழுது இயலுவதில்லை. சிரீ என்பது Siri என்று ஆங்கிலத்தில் முதலெழுத்துகளால் ஆன அஃகுப்பெயர் ( சுருக்கப்பெயர்). இந்த "Siri "என்பது, பேச்சைப் பகுத்துப் புரிந்துகொண்டு இயங்கும் இடைமுகம் என்று பொருள்படும் "Speech Interpretation and Recognition Interface" என்பதன் சுருக்கம் (அஃகம்).

அசைவுணர் மானி தொகு

இது நீங்கள் ஐபோனை செங்குத்தாக இருந்து கிடையாக மாற்றும் போது படங்களை நீங்கள் திருப்பிய வண்ணம் மாற்றி காண்பிக்கும் திறன் கொண்டது.

ஒளி உணரி தொகு

வெளிச்சம் குறைவான இடத்தில் ஐபோனை உபயோகிக்கும் போது இதன் திரை அதிக வெளிச்சத்துடன் தெளிவாக பார்க்கும் வகையில் மாறிக்கொள்ளும். அதே போல அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றாற் போல திரை மாறிவிடும்.

தூர உணரி தொகு

ஒரு அழைப்பை ஏற்படுத்திவிட்டு உங்கள் காதின் அருகில் கொண்டு செல்லும் போது இதன் திரை தானாக அணைந்துவிடும்; இது மின்னாற்றலை சேமிக்க உதவும் விதமாக அமைந்துள்ளது.

இதர அம்சங்கள் தொகு

  • உச்சரிப்பின் மூலமாக அழைப்பை ஏற்படுத்த முடியும்
  • உச்சரிப்பின் மூலமாக வானிலை, குறுந்தகவல் அனுப்ப முடியும்
  • இது 3.5G திறன் கொண்ட நகர் பேசி
  • 8 மெகாபிக்சல் கொண்ட படம்பிடி கருவி
  • அதிவேக இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் திறன் 14.4 Mbps on a HSPA+
  • நவீன ரெடினா திரை மூலமாக நிகழ்படங்களை தெளிவாக காணும் வசதி
  • விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
  • Pdf, Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
  • விமானம் ஏறியதும் கம்பியற்ற வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
  • கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
  • புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.

குறைகள் தொகு

  • ஆப்பிள் நிறுவன மென்பொருள் அல்லாத மற்ற மென்பொருட்களை ஏற்றி பயன்படுத்த இயலாது.
  • யுஎசுபி எளிதாக கணினியில் இணைக்க முடியாது
  • பிற பெரும்பாலான நுண்ணறி தொலைபேசிகளிலும் பார்க்க விலை அதி உயர்வானது.
  • கட்டற்ற மென்பொருட்களுக்கான ஆதரவு இல்லை.

மேற்கோள்கள் தொகு

  1. "iPhone". Cupertino, California: Apple. பார்க்கப்பட்ட நாள் October 23, 2011.
  2. "iPhone 4S Preliminary Benchmarks: ~800MHz A5, Slightly Slower GPU than iPad 2, Still Very Fast". AnandTech. October 11, 2011. பார்க்கப்பட்ட நாள் October 15, 2011.
  3. "iPhone 4S Teardown". iFixit. பார்க்கப்பட்ட நாள் October 13, 2011. Check out the marking, specifically E4E4, denoting two 2 Gb LPDDR2 die—for a total of 4 Gb—or 512 MB

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஐபோன் 4எஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-போன்_4எஸ்&oldid=3236902" இலிருந்து மீள்விக்கப்பட்டது