ஒசூர் கல்யாணசூடேசுவரர் கோயில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள சிவன் கோயில்

ஒசூர் கல்யாணசூடேசுவரர் கோயில் என்னும் கோயில் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் நகரில் சந்திர சூடேசுவரர் கோயில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் உள்ள தேர்பேட்டை என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் தேர்த் திருவிழாவின் போது சந்திர சூடேசுவரரின் உற்சவர் சிலை இக்கோயிலில் வைக்கப்பட்டே தேர்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கல்யாணசூடேசுவரர் கோயில்

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் கருவறை, முக மண்டபம் கொண்டு அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி கல்யாண சூடேசுவரர் லிங்க வடிவில் உள்ளார். கோயிலின் முக மண்டபத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த பொது மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது கல்யாண மண்டபம் என அழைக்கப்படுகிறது. இது அறுபது அழகிய தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயில் வரலாறு தொகு

விஜயநகர மன்னனான புக்கரின் மகன் குமார கம்பணனின் மகாப்பிரதானியான சோமப்ப தண்டனாயக்கன் என்பவனால் இக்கோயில் கட்டப்பட்டதாக இக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.[1]

மேற்கோள் தொகு

  1. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா. இராமகிருட்டிணன்.பக்.275