ஒட்டி வளர்தல்

ஒரு பூவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வட்ட அடுக்குகளின் கூட்டிணைவு

ஒட்டி வளர்தல் (Adnation) பூக்கும் தாவரங்களின் ஒரு பூவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வட்ட அடுக்குகளின் கூட்டிணைவைக் குறிக்கும். ஒட்டிணைவு என்ற சொல்லாலும் இதை குறிப்பிடலாம். ஆண் இணை உறுப்புடன் அல்லிவட்டம் இணைந்திருப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[1] ஒற்றை வட்ட அடுக்கிற்குள்ளேயே இணையொத்த உறுப்புகள் பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல் என்ற இயல்புக்கு இது முரணானதாகும்.[2][3]

தாழி வடிவ இலைகள் காரணமாக பெயரிடப்பட்ட வெப்பமண்டல தாழிச் செடி
பிரிமுலா வல்காரிசு என்ற பலவண்ண மலருடைய பசுமை மாறாச் செடியின் அல்லிவட்டத்துடன் ஒட்டிவளர்ந்துள்ள ஆண் இணை உறுப்புகள்

மேற்கோள்கள் தொகு

  1. Little, R. John; Jones, C. Eugene, eds. (1980). A Dictionary of Botany. New York: Van Nostrand Reinhold Company. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-24169-0.
  2. Little, R. John; Jones, C. Eugene, eds. (1980). A Dictionary of Botany. New York: Van Nostrand Reinhold Company. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-24169-0.
  3. Jackson, Benjamin Daydon (1928). A Glossary of Botanic Terms with their Derivation and Accent (fourth ed.). London: Gerald Duckworth & Co. Ltd. p. 89.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டி_வளர்தல்&oldid=3903204" இலிருந்து மீள்விக்கப்பட்டது