ஒட்ட நாடகம்

ஒட்ட நாடகம் என்பது,[1] ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால், ஒட்ட நாடகம் எனப்படுகிறது. இக்கலை, ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது, சேலம் , ஈரோடு , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.

இவ்விழாக்கள் பெரும்பாலும் பங்குனி,சித்திரை மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்பாட்டுகளாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் சித்திரவல்லி நாடகம் என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.நகர்ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் கூத்தாகவும், நகரங்களில் நாடகமாகவும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்ட_நாடகம்&oldid=3546872" இலிருந்து மீள்விக்கப்பட்டது