ஒருங்கியக்கம்

ஒருங்கியக்கம் (synergy) என்பது வெவ்வேறு நிறுவனங்கள் ஓர் இறுதி தீர்வுக்காக ஒத்துழைப்பதாகும். இது வியாபார பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டால், ஒரு நோக்கத்திற்காக தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் பணியாற்றுவதைவிட, குழுப்பணியில் ஓர் ஒட்டுமொத்த சிறந்த விளைவை உருவாக்க முடியும் என்பதை இது குறிக்கிறது. இது ஆங்கிலத்தில் சினெர்ஜி (synergy) என்றழைக்கப்படுகிறது.

இந்த வார்த்தையும், கருத்தாக்கமும் ஆர். பக்மின்ஸ்டர் புல்லரினால் கொண்டு வரப்பட்டு, அவருடைய சினெஜிட்டிக் வடிவியலின் எண்ணிலடங்கா உரிமங்களில் உள்ளடக்கப்பட்டது.[சான்று தேவை] இந்த வார்த்தை கிரேக்கத்தில் syn-ergos என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. ஒன்றுபட்டு பணியாற்றுதல் என்பதே இதன் அர்த்தமாகும். சொல்லிலக்கணரீதியாக கூறுவதானால், உண்மையில் இதையொரு கண்டுபிடிப்பு என்றே கூற வேண்டும்.

  • இது மாறிக்கொண்டிருக்கும் ஒரு நிலைமையில், ஒவ்வொரு உட்கூறின் மாறுபாடுகளுக்குப் பொருத்தமாக ஒருங்கிணைந்த நடவடிக்கை இருக்கும்.
  • ஒருங்கியக்கத்தில் செய்யப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்துழைப்பு முயற்சியானது, தனித்தனியான முயற்சியை விடச் சிறந்த அல்லது மாறுபட்ட விளைவை ஏற்படுத்துகிறது.

மருந்தில் ஒருங்கியக்கம் தொகு

மருந்துகள் ஒன்றோடொன்று கலந்து விளைவுகளை உருவாக்குவதே மருந்துகளில் ஒருங்கியக்கம் எனப்படுகிறது. இது மருந்துகளால் உண்டாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளையோ, அல்லது பக்க விளைவுகளையோ அதிகரிக்கும். சிலநேரங்களில் இது, ஒரு வலி நிவாரணியான கோடெய்னின் (codeine) செயல்பாட்டை ஊக்குவிக்க, அசிட்டாமினோபென் (acetaminophen) அல்லது ஐபோப்ரோஃபின் (ibuprofen) உடன் சேர்ந்து கலக்கப்பட்ட கோடெய்ன் போன்ற கலவைகளின் போது உருவாகிறது.

பெரும்பாலும் புத்துணர்வூட்டும் மருந்துகளில் ஒருங்கியக்கம் அதிகமாக நடக்கிறது. முன்னதாக செரோடொனின் 5-HTP மனஅழுத்தம் போக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. பெருமளவில் MDMA-ன் பூத்துணர்ச்சிக்கான பயன்பாட்டிற்குச் சிறிது நேரத்திற்கு பின்னர் அல்லது அதன்போதே இது பயன்படுத்தப்படுகிறது.

ஒருங்கியக்கத்தின் எதிர்மறை விளைவுகள் பொருந்தாதன்மையினால் உண்டாகின்றன. சான்றாக, மனஅழுத்தத்திற்கான ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தும் போது, அவை மைய நரம்பு மண்டலத்தைப் (CNS) பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக எரிச்சாராயம் மற்றும் வேலியம் (Valium) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஒவ்வொரு மருந்தின் தனித்தனி விளைவுகளை விட, இந்த கலவை ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்த குறிப்பிட்ட விஷயத்தில், இது சுவாச அழுத்தத்தை உருவாக்கும். இதற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும்.

தொற்றுநோயில் ஒருங்கியக்கம் தொகு

தொற்றுநோய் ஒருங்கியக்கம் நுண்ணுயிர் பெருக்கத்தில் ஏற்படக்கூடும். எடுத்துக்காட்டாக, ஒட்டுண்ணி A என்பது 10% உயிரிழப்புகளை ஏற்படுத்தினால், ஒட்டுண்ணி B-யும் 10% இழப்பை ஏற்படுத்தும். இரண்டு ஒட்டுண்ணிகளும் இருக்கும் போது, இழப்புகள் மொத்தம் 20 சதவீதத்திற்குக் குறையாமல் இருக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் சிலயிடங்களில், இது கணிசமாக அதிகமாகவும் இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் ஒட்டுண்ணிகளின் கலவை ஒரு ஒருங்கியக்க விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நச்சியலில் ஒருங்கியக்கம் தொகு

நச்சியல் ஒருங்கியக்கம் பொதுமக்களுக்கும், ஒழுங்குமுறை ஆணயங்களுக்கும் மிகவும் தொல்லை தருவதாகும். ஏனென்றால் தனிப்பட்டமுறையில் பாதுகாப்பானதாக கருதப்படும் இரசாயனங்கள், கலவையாக வெளிப்படும் போது, ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு சுகாதார அல்லது சுற்றுச்சூழல் அபாயத்தை நிலைநிறுத்தக்கூடும்.

விஞ்ஞான மற்றும் வெகுஜன இதழ்களின் கட்டுரைகள், இரசாயனங்கள் அல்லது நச்சியல் ஒருங்கியக்கம் குறித்து பல்வேறு வரையறைகளை வெளியிடுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வெற்றுக்கட்டுரைகளாகவும், ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவைகளாகவும் இருக்கின்றன.

ஒருங்கியக்கம் ஒரு கலவையை எப்போதும் ஆபத்தாக்கி விடக்கூடாது. அது எப்போதும் கலவையைப் பாதுகாப்பானதாகவே மாற்ற வேண்டும் என்று EPA வலியுறுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் விளைவு சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கின்றன. பூச்சிக்கொல்லிகளைப் பதிவு செய்யும் போது, மனிதர்களுக்கு சுகாதார பாதுகாப்பை அளிக்குமா என்று தீவிரமாக சோதிக்கப்பட வேண்டும்.

எவ்வாறிருப்பினும் பொதுவான விவசாய முறையில், ஒரேவிதமான பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது மிகவும் அரிதாகவே இருக்கிறது. தானிய உற்பத்தியின் போது பல்வேறு விதமான பொருட்கள் பயன்படுத்தப்படலாம். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அளவிலான இரசாயன அளவு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஒவ்வொன்றும் பாதுகாப்பானதே என்று கருதப்படுகிறது.

பல சமயங்களில், ஒரு வர்த்தகரீதியான பூச்சிகொல்லியே கூட பல்வேறு இரசாயன பொருட்களின் ஒரு கூட்டு கலவையாக இருக்கிறது. அதிலிருக்கும் பாதுகாப்பு அளவுகள் உண்மையில் கலவைகளின் அளவையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன. பெரும்பாலும், விவசாயத்திற்காக உருவாக்கப்படும் கலவைகள், அரிதாக தான் கலவை நிலையில் சோதிக்கப்படுகின்றன.

உணவுகளில் இருக்கும் மிச்சங்கள், அறைக்குள் இருக்கும் காற்று மாசுபாடு, மற்றும் இரசாயனங்கள் சேகரித்து வைப்பது போன்றவையும் இதில் உள்ளடங்கும். இந்த வெளிப்பாடுகள் ஒன்றோடொன்று கலப்பதால் தான் புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பிற சுகாதார பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக சில குழுக்கள் கருதுகின்றன; வேறு சிலர் வேறு விளக்கங்களைச் சொல்வதும் உண்டு. மக்களிடமும், விலங்குகளிடமும் செய்யப்படும் இரசாயன நச்சுத்தன்மை பற்றிய ஆராய்ச்சியில் கிடைக்கும் பதில் தான், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கேள்விக்குப் பதிலை அளிக்கும். பைப்ரோனில் பட்டாக்சைடு (Piperonyl butoxide) மற்றும் MGK 264[1] ஆகியவை பூச்சிக்கொல்லி ஒருங்கியக்கதிற்கான எடுத்துக்காட்டுகளாகும்.

மனிதவள ஒருங்கியக்கம் தொகு

மனிதவள ஒருங்கியக்கம் மனிதர்களோடு தொடர்புபடுகிறது. எடுத்துக்காட்டாக, A என்கிற ஒருநபர் ஒரு மரத்தில் இருக்கும் ஓர் ஆப்பிளைத் தொடும் அளவிற்கு உயரமில்லை என்று வைத்து கொள்வோம். அதேபோல B என்கிற ஒரு நபரும் அவ்வாறே உயரம் குறைந்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். A என்கிற நபரின் தோள்களில் B என்கிற நபர் உட்கார்ந்து கொண்டால், அந்த ஆப்பிளைத் தொட அவர்களின் உயரம் போதுமானதாகும். இந்த எடுத்துக்காட்டில், அவர்களுடைய ஒருங்கியக்கத்தின் விளைவு ஓர் ஆப்பிள் ஆகும்.

இன்னொரு எடுத்துக்காட்டுக்காக இரண்டு அரசியல்வாதிகளை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு மில்லியன் வாக்குகளைப் பெறக்கூடும் என்று வைத்து கொள்வோம். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்தால் 2.5 மில்லியன் வாக்குகளைப் பெறக்கூடும் என்றால், அவர்களின் ஒருங்கியக்கம், அவர்கள் தனித்தனியாக பெற்றிருக்கக்கூடியதை விட 500,000-த்திற்கும் அதிகமான வாக்குகளை உருவாக்கக்கூடும். ஒரு பாடல் கூட மனிதவள ஒருங்கியத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இரண்டு நபர்கள் வெவ்வேறு சிறப்பு திறமைகளை ஒருங்கிணைக்கும் போது பொதுவாக ஒருங்கியக்கம் உருவாகிறது. தொழிலில், நிறுவனத்தில் மற்றும் தொழில்நுட்ப திறமைகளைப் பெற்றிருக்கும் பணியாளர்களின் கூட்டுறவில் மிகப் பொதுவாக ஒருங்கியக்கம் நிகழ்கிறது. மறுபுறம், உயர்ந்த ஒருங்கியத்தைக் உருவாக்க, அதற்கேற்ப குழுக்களை உருவாக்குவதற்காகவே ஒரு குறிப்பிட்டத்துறையில் தங்களைத் தகுதிப்படுத்தி கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள் (தொழிலாளர் பிரிவு மற்றும் பணிக்குழுவின் பிரிவுகள்).

பெருநிறுவன ஒருங்கியக்கம் தொகு

பெருநிறுவனங்கள் தொடர்பு கொள்ளும் போது, பெருநிறுவன சினெர்ஜி உருவாகிறது. ஒரு பெருநிறுவனம் மற்றொரு பெருநிறுவனத்துடன் இணையும் போதோ அல்லது மற்றொன்றை கையகப்படுத்தும் போதோ அந்த நிறுவனத்தின் நிதியியல் ஆதாயத்தையே பெருநிறுவன ஒருங்கியக்கம் குறிக்கிறது.

பெருநிறுவன ஒருங்கியக்கங்களில் மூன்று வெவ்வேறு வகைகள் இருக்கின்றன:

வருவாய் தொகு

வருவாய் ஒருங்கியக்கம் என்பது, முன்னர் இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக இருந்து உருவாக்கியதை விட அதிகமான வருவாயை உருவாக்குவதற்கான ஓர் ஒருங்கிணைந்த பெருநிறுவனத்திற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, A என்ற நிறுவனம் X என்ற தயாரிப்பையும், B என்கிற நிறுவனம் Y என்கிற தயாரிப்பையும் விற்கின்றன. நிறுவனம் A, நிறுவனம் B-ஐ வாங்க முடிவெடுக்கிறது என்றால், பின் புதிய நிறுவன தயாரிப்புகள் X மற்றும் Y ஆகிய இரண்டையும் விற்பனை செய்ய ஒவ்வொரு விற்பனை பிரதிநிதியும் பயன்படுத்தும், அதன் மூலம் வருவாயை அதிகரிக்கும்.

நிர்வாகம் தொகு

மேலாண்மையும், குழுப்பணியையும் பொறுத்தவரையில் ஒருங்கியக்கமானது, அந்த குழுவில் பங்கெடுத்திருக்கும் தனிநபர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. இதில் நேர்மறை அல்லது எதிர்மறை ஒருங்கியக்கம் ஏற்படக்கூடும்.

செலவு தொகு

செலவு ஒருங்கியக்கம் என்பது ஒரு வியாபாரத்தைச் செயல்படுத்தும் போது, செலவுகளைக் குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ ஓர் ஒருங்கிணைந்த பெருநிறுவன அமைப்பின் வாய்ப்புகளைக் குறிக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பிற்குள் பதவிகளை நீக்குவதன் மூலமாக செலவு ஒருங்கியக்கம் உணரப்படுகின்றன.

இது பொருளாதாரங்களின் அளவீட்டின் பொருளாதார கருத்தாக்கத்தோடு தொடர்புபடுவது.

கணினிகள் தொகு

இதில் ஒருங்கியக்கமானது, மனிதவள திறனின் மற்றும் கணினி திறன்களின் கலவையாக வரையறுக்கப்படுகிறது, நவீன செஸ் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாகும். மனிதர்களை விட கணினிகள் தரவுகளை மிக வேகமாகச் செயல்படுத்தக்கூடும். ஆனால் அவற்றால் சமயோசிதமாக செயல்பட முடியாது.

ஊடகத்தில் ஒருங்கியக்கம் தொகு

ஊடக பொருளாதாரத்தில், ஓர் ஊடக குழுமத்தின் பல்வேறு சேய் நிறுவனங்களின் ஒருங்கியக்கமானது ஒரு தயாரிப்பை ஊக்குவிக்கவும், விற்பதுக்குமானது.[2] எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், இசை டிராக்குகள் அல்லது வீடியோ விளையாட்டுக்கள் போன்றவை.

1930-ஆம் ஆண்டுகளில் வால்ட் டிஸ்னி ஒருங்கியக்கச் சந்தைப்படுத்தல் நுட்பங்களில் முன்னணி வகித்தார். அவரின் மிக்கி மவுஸ் (Micky Mouse) பாத்திரத்தை பிற நிறுவனங்களின் தயாரிப்புகளிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்த பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமம் அளித்ததன் மூலம் அவர் இதைச் செய்தார்.

மேலும் உரிம உடன்பாடுகள் மூலமாக டிஸ்னி ஊடகத்தை சந்தைப்படுத்தவும் தொடங்கினார். இந்தத் தயாரிப்புகள் திரைப்படங்களையே கூட விளம்பரப்படுத்த உதவின. இதன்மூலம் திரைப்படத்தின் விற்பனையை அதிகரிக்க உதவியது.

மேலும் பார்க்க தொகு

  • சினெர்ஜிடெக்ஸ்
  • சினெர்ஜிசம்
  • புனிதவாதம்
  • அவசர நிலை
  • மிகப்பெரிய சூறாவளி
  • அமைப்புமுறைகளின்கோட்பாடு

குறிப்புதவிகள் தொகு

  1. பெரித்ராய்டுகள் மற்றும் பெரித்ரின்கள், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, epa.gov
  2. கேம்ப்பெல், ரிச்சர்டு, கிறிஸ்டோபர் ஆர். மார்ட்டீன், மற்றும் பெட்டினா ஃபேபஸ். ஊடகம் & கலாச்சாரம் 5: பரந்த தொலைதொடர்பிற்கான ஓர் அறிமுகம். ஐந்தாம் பதிப்பு 2007 மேம்படுத்தப்பட்டது ed. போஸ்டென்: பெட்போர்ட் செயிண்ட் மார்ட்டீன்ஸ், 2007. 606.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருங்கியக்கம்&oldid=3512479" இலிருந்து மீள்விக்கப்பட்டது