பொதுவாக விழித்திரையில் ஒளிக்கதிர்கள் விழுவதை உணர்வதன் மூலமாகவே காட்சிகளைக் காணமுடியும். அவ்வாறின்றி இருளிலும் விழி மூடியிருக்கையிலும் வேறு ஏதாவது இயக்கத்தினால் தெரியும் காட்சிப் போலிகளை ஒளிப்போலி (Phosphene) அல்லது ஒளியறு காட்சிப்போலி எனலாம்.

கண்களை அழுத்துவதால் ஏற்படும் ஒளிப்போலியின் ஒரு வரைமாதிரி

ஏதேனும் அழுத்தத்தினாலோ மின் இயக்கத்தினாலோ காந்தப் புலத்தினாலோ விழித்திரையிலுள்ள நரம்பணுக்களையும் மூளையில் பார்வைக்கான நரம்பணுக்களையும் தூண்டுவதன்மூலமாக இவ் ஒளிப்போலிகளை உருவாக்க முடியும். தியானம் எனும் ஆழ்நிலை எண்ணத்தில் இருப்பவர்களும் இல்பொருள்தோற்றம் தரும் மயக்கப் (போதைப்) பொருட்களை உட்கொள்பவர்களும் ஒளிப்போலிகளை உணர்கிறார்கள்.[1][2] இவைதவிர, காண் நரம்புவீக்கத்தினால் (optical neuritis) பிணியுற்றிருப்பவர்கள் சில வேளைகளில் விரைவான நகர்வு அல்லது சில ஒலிகளினால் தூண்டப்பெற்று இவ்வாறான போலிக்காட்சிகளைக் காண்கின்றனர்.[3][4]

1988-ஆம் ஆண்டு தேவிது இலூயி-வில்லியம்சு, தௌசன் எனும் ஆய்வாளர்கள் ஒளிப்போலிகளைப் பற்றியும் பிற விழுயுள் தோற்றப்பாடுகளைப் பற்றியும் ஒரு கட்டுரை வெளியிட்டனர். அதில் பின்னைப் பழங்கற்காலத்தைச் சேர்ந்த சில உருவமற்ற கலைப்படைப்புகள் ஒளிப்போலிகளையும் பிற நரம்பியல் மாறிலித் தோற்றங்களையும் காட்டுபவை என்றும் அவ்வோவியங்களைத் தீட்டியவர்கள் மயக்கம் தரும் போதைப் பொருட்களை உட்கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.[5]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "The Soma Code, Part III: Visions, Myths, and Drugs - Philip T. Nicholson". Archived from the original on 2013-03-31. பார்க்கப்பட்ட நாள் 2013-02-17.
  2. Kluver, H. 1966 Mescal and mechanisms and hallucinations University of Chicago Press. p. 70
  3. Davis FA, Bergen D, Schauf C, McDonald I, Deutsch W (November 1976). "Movement phosphenes in optic neuritis: a new clinical sign". Neurology 26 (11): 1100–4. பப்மெட்:988518. https://archive.org/details/sim_neurology_1976-11_26_11/page/1100. 
  4. Page NG, Bolger JP, Sanders MD (January 1982). "Auditory evoked phosphenes in optic nerve disease". J. Neurol. Neurosurg. Psychiatr. 45 (1): 7–12. doi:10.1136/jnnp.45.1.7. பப்மெட்:7062073. 
  5. Lewis-Williams JD et al. (1988). "The signs of all times: entoptic phenomena in Upper Palaeolithic art.". Current Anthropology 29 (2): 201-45. http://www.jstor.org/discover/10.2307/2743395?uid=3739600&uid=2129&uid=2&uid=70&uid=4&uid=3739256&sid=21102116134723. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்போலி&oldid=3547053" இலிருந்து மீள்விக்கப்பட்டது