ஓஷ் என்பது கிர்கிஸ்தானில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய நகரமாகும், இது கிர்கிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள ஃபெர்கானா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் பெரும்பாலும் "தெற்கின் தலைநகரம்" என்று குறிப்பிடப்படுகிறது. இது 3000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகரம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மற்றும் 1939 முதல் ஓஷ் பகுதியின் நிர்வாக மையமாக பணியாற்றி வருகிறது. இந்த நகரம் 2017 ஆம் ஆண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 281,900 கொண்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.இந்த நகரம்,[1] உஸ்பெக்கியர், கிர்கிசுகள், ரஷ்யர்கள், தஜிக்குகள் மற்றும் பிற சிறிய இனக்குழுக்களை உள்ளடக்கியது. இது   உஸ்பெகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கண்ணோட்டம் தொகு

ஓஷ் நகரம், ஒரு முக்கியமான வெளிப்புற வணிக சந்தையைக் கொண்டுள்ளது, இது கடந்த 2000 ஆண்டுகளாக பட்டுப்பாதை எனப்படும் சில்க் சாலையில் நடந்து வருகிறது. மேலும் இது, ஒரு முக்கிய சந்தையாக இருந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நிறுவப்பட்ட நகரத்தின் தொழில்துறை தளம், சோவியத் யூனியன் உடைந்த பின்னர் பெருமளவில் சரிந்தது. பின்னர், சமீபத்தில் புதுப்பிக்கப் பட்டது.

இந்த நகரத்தில் பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. அவற்றில், தெற்கு கிர்கிஸ் "ராணி" குர்மஞ்சன் தட்காவின் நினைவுச் சின்னமும், மற்றும் விளாதிமிர் லெனினின் மீதமுள்ள சிலைகளில் ஒன்றும் இங்கு உள்ளது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஒரு ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம், நாட்டின் இரண்டாவது பெரிய பள்ளிவாசல், இந்த நகரத்தின் சந்தை அருகே அமைந்துள்ளது. மேலும், 16 ஆம் நூற்றாண்டின் ரபாத் அப்துல் கான் மசூதியை இங்கே காணலாம். கிர்கிஸ்தானில் உள்ள ஒரே உலக பாரம்பரிய தளமான சுலைமான் மலை ஓஷ் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் அற்புதமான காட்சியை வழங்குகிறது.[2]

இந்த நகரத்தில், முதல் மேற்கத்திய பாணி விற்பனை அங்காடி, "நரோட்னிஜ்" மார்ச் 2007 இல் திறக்கப்பட்டது.[3]

நிர்வாகம் தொகு

ஓஷ் நகரம், 182.5 சதுர கிலோமீட்டர்கள் (70.5 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. மற்றும் தலைநகர் பிஷ்கெக்கைப் போலவே, தனித்தனியாக நிர்வகிக்கப்படுகிறது. நகரத்தைத் தவிர, 11 கிராமங்கள் இந்த நகரத்தால் நிர்வகிக்கப்படுகின்றன: அவை, அல்மாலிக், அரேக், குல்பார்-டோலைகோன், ஜபாலக், கெங்கேஷ், கெர்ம்-டூ, ஓர்கே, பியாட்டிலெட்கா, டீக் மற்றும் ஓஸ்கூர் மற்றும் தொலாய்கான் பகுதிகள் போன்றவை ஆகும்.

மக்கள் தொகை தொகு

கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கிற்குப் பிறகு ஓஷ் இரண்டாவது பெரிய நகரமாகும். 2009 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர மக்கள் தொகை 258,111 ஆக இருந்தது, இதில் உள்ள 11 கிராமங்களின் மக்கள் தொகை சுமார், 25,925 பேர் ஆகும். இக் கிராமங்கள் ஓஷ் நகரத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இங்குள்ள மொத்த மக்கள் தொகையில், 57.9% உஸ்பெக்கியர்கள், 34.2% கிர்கிசுக்கள், 2.5% ரஷ்யர்கள், 2.2% துருக்கியர்கள், 1.1% தாதர்கள் மற்றும் 2.1% பிற தேசிய இனத்தவர்கள் ஆவர். சுற்றியுள்ள காரா-சூ மாவட்டத்தில் அதன் புறநகர்ப் பகுதிகளைக் கொண்ட நகரத்தின் மக்கள் தொகையானது, 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 500,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலவியல் தொகு

காலநிலை தொகு

கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் கீழ், ஓஷ் நகரம், ஒரு ஈரப்பதமான கண்ட காலநிலையை ( டிஎஸ்ஏ ) கொண்டுள்ளது. இங்குள்ள பருவநிலை, வெப்பமான, வறண்ட கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலமாக உள்ளது. ஓஷ் நகரம் ஆண்டுதோறும் சராசரியாக 400 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது. இவற்றில் பெரும்பகுதி பொதுவாக கோடை மாதங்களுக்கு வெளியே நகரத்தில் விழுகிறது. ஓஷில் கோடை காலம் வெப்பமாக இருக்கும். சராசரி உயர் வெப்பநிலை வழக்கமாக 30 °C ஐ தாண்டுகிறது.   . குளிர்கால பருவத்தின் போது, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் என்பது இடைக்கால பருவங்களாக உள்ளது. வசந்த காலத்தின் போது வெப்பநிலை உயர்ந்து இலையுதிர்காலத்தில் வீழ்ச்சியுறுகிறது.

நகரமைப்பு தொகு

2006 ஆகஸ்டு 7இல், சுலைமான் மலையிலிருந்து எடுக்கப்பட்ட ஓஷ் நகரத்தின் புகைப்படம்.

குறிப்புகள் தொகு

  1. 2017-жылдагы Кыргыз Республикасынын облустарынын, райондорунун, шаарларынын, шаар тибиндеги кыштактарынын калкынын саны, Численность населения Кыргызской Республики на 1 января 2017 года
  2. "Osh Travel Guide | Caravanistan". Caravanistan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
  3. In Osh opened a supermarket "Narodnyj" பரணிடப்பட்டது 2012-03-27 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓஷ்_நகரம்&oldid=3237496" இலிருந்து மீள்விக்கப்பட்டது