கங்காவிசர்ஜன மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
கங்காவிசர்ஜன மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

கங்காவிசர்ஜன மூர்த்தி என்பது சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். தேவ நதியான கங்கையின் தீர்த்தம் பட்டால் மட்டுமே தனது முன்னோர்கள் மோட்சம் பெறுவார்கள் என்று அறிந்த பகிரதன் கங்கையை நோக்கி தவமியற்றினார். தேவ லோகத்திலிருந்து பூலோகத்திற்கு வரும்பொழுது அளவற்ற வேகத்துடன் வருவாதால் அனைத்தும் அழியும் என்று அஞ்சுய கங்கை, தன்னை தாங்ககூடியவர் சிவனென்றும் அவரிடம் பகிரதனை வணங்கி வரம்பெறுமாறும் பணித்தார்.

பகிரதனும் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து சிவனருள் பெற்றார். கங்கையை தனது சடாமுடியில் தாங்கிய சிவபெருமான் அதிலிருந்து சிலதுளிகளை மட்டும் பகிரதனுக்காக தந்தார். அதுவே மிகப்பெரும் வெள்ளமாக சென்றது. இவ்வாறு கங்கையை சடாமுடியில் தாங்கி சிறிது மட்டும் விடுவித்த சிவபெருமானின் தோற்றம் கங்காவிசர்ஜன மூர்த்தி எனப்படுகிறது. [1]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=782 தினமலர் கோயில்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காவிசர்ஜன_மூர்த்தி&oldid=2205964" இலிருந்து மீள்விக்கப்பட்டது