கச்சல் தீவு

நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவு

கச்சல் தீவு (Katchal, நிக்கோபாரி: तिहन्यु, Tihnyu) என்பது இந்தியாவின் நிக்கோபாரி தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 174.4 கி.மீ. 2 (67.3 சதுர மைல்) ஆகும். இது தோராயமாக இந்திய முதன்மை நிலப்பரப்பில் இருந்து 1,600 கி.மீ (990 மைல்) தொலைவில் உள்ளது. தலைநகரான போர்ட்பிளேரில் இருந்து, தெற்கில் 305 கி.மீ. (190 மைல்) தொலைவில் உள்ளது.[4]

கச்சல் தீவு
Katchal Island
Nickname: Tihanyu
கச்சல் தீவு Katchal Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
கச்சல் தீவு Katchal Island
கச்சல் தீவு
Katchal Island
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்7°57′N 93°23′E / 7.95°N 93.38°E / 7.95; 93.38
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • கச்சல் தீவு
பரப்பளவு146.5 km2 (56.6 sq mi)
நீளம்17 km (10.6 mi)
அகலம்16 km (9.9 mi)
கரையோரம்83.3 km (51.76 mi)
உயர்ந்த ஏற்றம்227 m (745 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை2685
அடர்த்தி18.3 /km2 (47.4 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல்744301
தொலைபேசி03192
ஐ.எஸ்.ஓIN-AN-00[1]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

இத்தீவு முன்பு துனியு ( Tihnyu ) என அழைக்கப்பட்டது. இத்தீவில் பழங்குடி மக்கள் மற்றும் குடியேறிகள் என இரு தரப்பினரும் வாழ்கின்றனர். இத்தீவு 2004 ஆண்டைய ஆழிப்பேரலையில் கடுமையாக பாதிப்புக்கு ஆளானது.[5] இப்பகுதி இந்திய ஒன்றிய ஆட்சிக்குட்பட்ட நிக்கோபார் மாவட்ட ஆட்சி எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது.

இத்தீவில் நிக்கோபர் பழங்குடியின மக்களும், இலங்கை மலையகத் தமிழரும் வாழ்கின்றனர். ( சிரிமாவோ - சாஸ்திரி உடன்பாட்டின்படி 1964 இல் மறுகுடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள்). இத்தீவுக்கு போர்ட்பிளேயரில் சிறப்பு அனுமதிபெற்ற சுற்றுலா பயணிகளைத் தவிர பிறரை அனுமதிப்பதில்லை.

2000 சனவரி 1 அன்று துவங்கிய புத்தாயிரம் ஆண்டைய முதல் சூரிய உதயத்தைக் காண, உலகம் முழுவதும் இருந்து பல புகழ்பெற்ற பணக்கார மக்கள் இத்தீவில் கூடினர்.

2004 திசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது தீவின் சமூக பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது, 5,000 மக்கள் அதிகாரப்பூர்வமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் காணாமல் போயினர் ஆனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தத் தீவிலிருந்து காணாமல் போனவர்கள் 1,549 பேராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆழிப்பேரலைக்குப் பின்னர் தீவில் இருந்த பழங்குடிகள் பெரும்பாலானவர்கள் இறந்தனர். ஆரம்ப மதிப்பீடுகளின்படி. தீவில் உள்ள நிலத்தில் 112 ஹெக்டேர் (277 ஏக்கர்) உவர் நிலமாக மாறியது. மேலும் 3.54 லட்சம் தென்னை மற்றும் அதற்கு இணையான அளவு பாக்கு மரங்கள் அழிந்தன.

இதன் அருகில் உள்ள தீவான டிரிங்கிட் தீவு 2004 திசம்பர் 26 அன்றைய ஆழிப்பேரலையின்போது கடல் நீரால் மூன்றாக பிரிக்கப்பட்டு, பல நாட்கள் நீரில் மூழ்கி இருந்தது. இதில் டிரிங்கிட் மற்றும் சாப்டு பாலு ஆகிய இரண்டு கிராமங்கள் இருந்தன. இதன் தோராய மக்கள் தொகை 475 ஆகும். இதில் இறந்த அல்லது காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 102, தப்பியவர்கள் 374 பேர் ஆவர். தற்போதுவரை இத்தீவு வாழப் பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டு, மக்கள் அருகில் உள்ள கமோர்ட்டா தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிக்கோபார் தீவுகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம்; அவை வடக்கு, நடு. தெற்கு என்பதாகும். கட்சால் தீவு நடுக்குழுவில் உள்ள பெரிய தீவாகும். இது 35 கிராமங்களை உள்ளடக்கியது. (இதில் ஆறு கிராமங்கள் முதன்மையானவை).[6] ஆழிப்பேரலைக்குப் பின், பூர்வீக மக்களின் கிராமங்களாக நான்கு கிராமங்களாக அமைக்கப்பட்டன. அவை ஈ-வோல், மீனாட்சி ராம் நகர், சப்பான் டிக்ரி, மேல் கட்சால். மில்டெரா ஆகும். தீவில் உள்ள இன்னொரு கிராமம் பழங்குடியினர் அல்லாத மக்களுக்கானது (மறுகுடியமர்ம்ம்ப்பட்ட தமிழர்கள் மற்றும் ராஞ்சி மக்கள்).

தீவின் உயரமான இடம் 835 அடி ஆகும். தீவில் பேசப்படும் மொழிகள் நிக்கோபாரி, இந்தி, தமிழ், தெலுங்கு, சந்தாளி ஆகும். இத்தீவு தொலைவாகவும், ஏனைய பகுதிகளில் இருந்து தனிமைபடுத்தப்பட்டதாகவும் உள்ளதால், பழங்குடிகளை வெளியாட்கள் பொருளாதார்ரீதியாக சுரண்டுவதைத் தடுக்க, நிக்கோபார் தீவுகளை 1957 ஏப்ரல் 2 அன்று தொன்மையான பழங்குடி காப்புப் பகுதி (ATRA) என இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலமாக இந்த நிக்கோபார் தீவுகளுக்குச் செல்ல வெளியாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது கூட இந்தியாவில் இருந்து இங்கு வரவேண்டுமானால் சிறப்பு அனுமதி பெற வேண்டும். தீவுகளில் தங்கும் வெளியாட்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே ஆவர்.

நிக்கோபார் தீவுகள் பலவகையான வெளிப்புறத் தாக்கங்களுக்கு பல நூற்றாண்டுகளாக உட்பட்டுள்ளது. ஏனென்றால் இத்தீவுகள் பழங்கால பன்னாட்டு கடல் வணிகப் பாதையில் அமைந்துள்ளதே காரணம். இத்தீவுவாசிகளின் பண்பாடு, அடையாளம் போன்றவை வெளி ஆட்களால் பல நூற்றாண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி 1059 ஆண்டைய கல்வெட்டின்படி நிக்கோபார் தீவுகள் தமிழ் மன்னர்களான தஞ்சை சோழர்களின் ஆளுகைக்கு உட்டப்படிருந்தது. 1869 ஆண்டு, பிரித்தானியர்கள் இத்தீவுகளை டேனிஷ்காரர்களிடம் இருந்து கைப்பற்றினர்.

இத்தீவு மலைகள் நிறைந்ததாக உள்ளது. சுண்ணாம்பு, மணற்கற்கள், பளிங்கு கற்கள் போன்றவற்றுடன் அழகான வெப்பமண்டல காடுகளைக் கொண்டுள்ளது. இத்தீவுகளில் மலைப்பாம்புகள், கருங்குரங்குகள், பன்றிகள் ஆகியவை உள்ளன. இங்கு இயற்கை அழகு நிறைந்துள்ளது. கண்கவர் கடற்கரைகள், காடுகள், சூரிய உதயம் மற்றும் மறைவு போன்றவை சிறப்பானவை. தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேங்காய், பாக்கு போன்றவை இடம்பிடித்துள்ளன. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரப்பர் தோட்டங்கள், சிவப்பு எண்ணெய் பனை தோட்டங்கள் இங்கே நிறுவப்பட்டன.

காணப்படும் பறவைகள்

வசதிகள் தொகு

நிரந்தரக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

நலவாழ்வு
  • ஆரம்ப சுகாதார நிலையம்: 1
  • சுகாதார துணை மையங்கள்: 3
கல்வி (இந்திய முறையில்)
  • துவக்கப்பள்ளிகள் (5ஆம் வகுப்புவரை) - 6
  • நடுநிலைப் பள்ளி (ஆறாம் வகுப்பு முதல் எட்டம் வகுப்புவரை) - 2
  • மேல்நிலைப்பள்ளி (11வது முதல் 12வது வரை) - 1
குடிநீர் வசதி

குடிநீர் வசதி போதுமானதாக உள்ளது.

மின்வசதி

தற்போது (மின்னாக்கிகளால் - 3x128 கி.வா) மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சாலைகள்

8.66 கி.மீ. நீளம் கொண்டவை.

கூட்டுறவு சங்கங்கள்: 4

காவல் நிலையம்: 1

போக்குவரத்து வசதி: கப்பல்வழியாக (கமாட்டாவில் இருந்து படகு வழியாக ).

தொடர்பு முறை: வயர்லஸ் உள்ளூர் வளைய தொலைபேசிகள் மற்றும் PSTN தொலைபேசிகள் செல்லிடபேசி சமிக்ஞை வலிமை தற்போது மிகவும் குறைவாக உள்ளது.

தகவல் தொழில்நுட்பம்: மின்னாளுமை வழியாக வளர்ச்சி பணிகள் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மேற்கோள்ளத் திட்டம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Registration Plate Numbers added to ISO Code
  2. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-12-25.
  3. Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 293.
  4. "Know some Essential Facts about the Katchal Island of Katchal,". பார்க்கப்பட்ட நாள் 3 மே 2016.
  5. "Ecological impact of tsunami on Nicobar Isla nds" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Katchal Island Travel Vacations Katchal Holidays Package". Archived from the original on 2017-01-16. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சல்_தீவு&oldid=3792808" இலிருந்து மீள்விக்கப்பட்டது