கடல் ஆளுமை (Naval Supremacy / Command of the Sea) என்பது போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் ஒரு நாடு அல்லது கூட்டணியின் கடற்படை ஒரு கடற்பகுதியை முழுமையாகக் கட்டுப்படுத்துவது. இத்தகு ஆற்றல் உள்ள நாடுகளால் எதிர் தரப்பு போர்க்கப்பல் மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலும். பொதுவாக ஆழ்கடல் கடற்படை உடைய நாடுகள் கடல் ஆளுமையை அடைகின்றன. கடல் ஆளுமை வான் படைகள் வான்வெளியில் அடையும் வான் ஆளுமைக்கு இணையானது.[1][2][3]

ஒன்றுக்கு மேற்பட்ட கடல்களில் ஆளுமையாக உருப்பெறும் நாடுகள் பெரும் வல்லரசுகளாக மாறும் வாய்ப்பைப் பெறுகின்றன. பிரித்தானியப் பேரரசின் வல்லமைக்கு அதன் கடற்படையின் ஆளுமையே முதன்மைக் காரணம். தற்காலத்தில் ஐக்கிய அமெரிக்க கடற்படை மட்டும் உலகின் பல பகுதிகளில் ஆளுமை செலுத்தும் வன்மை பெற்றுள்ளது. சீனா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், உருசியா போன்ற வேறு சில நாடுகளின் கடற்படைகள் தங்கள் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மட்டுமே ஆளுமை செலுத்தும் வன்மை பெற்றுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1.   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Bridge, Cyprian Arthur George (1911). "Sea, Command of the". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. Cambridge University Press. 
  2. "Q&A with Adm. Michael G. Mullen 2006 CNO's Guidance Release Media Roundtable Pentagon, Washington, DC 13 October 2005". Archived from the original on 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 4 February 2008.
  3. Why buy Abrams Tanks? We need to look at more appropriate options By Gary Brown - posted Wednesday, 31 March 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_ஆளுமை&oldid=3889737" இலிருந்து மீள்விக்கப்பட்டது